பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


மாயையின் காரியமாகிய உலகம், அறிவில்லாத பொருளாதலாலும், உலகில் வாழும் மன்னுயிர்கள் ஆணவ இருளால் மறைக்கப்பெற்றுச் சிற்றறிவினை உடையன ஆதலாலும் இவ்விருவகைப் பொருளையும் ஒன்று இயக்குதற்கு இவற்றின் வேறாகிய முதற்கடவுள் ஒருங்கு உண்டு என்பது பெறப்படும்.

பெறப்படவே, காணப்படும் உலகம் வியக்கத்தக்க இயக்கம் உடையதாய்த் தொழிற்படுதலின் இவ்வுலகினை இயக்கும் முதற்கடவுள் அளவிலா ஆற்றலும், முற்றுணர்வும் பேரருளும் முதலியனவாக எண்ணப்படும் குணங்களுடையன் என்பதும் பெறப்பட்டது. எனவே அத்தன்மையனாகிய முதற்கடவுள் ஒருவனே அமையும்; வேறு அத்தன்மைய பொருள் ஒன்று உண்டு எனக் கொள்வதற்குச் சிறிதும் இடம் இல்லை. அன்றியும் ஒரு பொருளுக்குக் கூறப்படும் இலக்கணத்திற் சிறிதும் வேறுபாடு இல்லாத நிலையில் அப்பொருள் ஒன்றாக இருத்தல் கூடுமேயன்றிப் பலவாக இருத்தல் இயலாது என்னும் கருத்தினாலேயே 'ஒன்றலா ஒன்று' என்றார். 'ஒன்று அல்லா ஒன்று' என்றது, உருவும், அருவுமாகிய இருகூற்றுப் பிரபஞ்சத்துள் ஒன்றுமல்லாத முழுமுதற் பொருள் என்றவாறு. 'ஒன்று என்பது இலக்கணத்தால் வேறுபாடு இல்லது என்னும் பொருட்டு' எனச் சிவஞான முனிவர் இத்தொடர்ப் பொருளை விளக்கி முதற் கடவுள் ஒருவரே எனத் தெளிவித்துள்ளமை இங்கு நினைவுகூரத் தகுவதாகும்.

கடவுள் ஒருவரே என்னும் இவ்வுண்மை, 'ஒன்றவன் தானே’ (திருமந்திரம்) எனவும், 'ஒன்றே குலம் ஒருவனே தேவனும்' (திருமந்திரம். 21.04) எனவும் திருமூலநாயனார்.