பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

339

எனக்கருதிய இராமலிங்கவள்ளலார், எல்லோரும் எளிதிற் பெருளுணர்வதற்குரிய தெளிந்த செழும்பாடல்களையும் ஆராய்ந்துணர்தற்குரிய குறிப்புடைய அரும்பொருட் பாடல்களையும் இயற்றியுள்ளார்கள். அவற்றுள் நுண்ணிதின் உணரும் அரும் பொருட் பாடல்களாக வள்ளலார் பாடிய திருவருட்பாப் பனுவல்களில் 'இங்கித மாலையும்' ஒன்று. இதன்கண் - ஒரு தொடரினையே இரு பொருள் படவும் ஆண்டுள்ள இடங்கள் பல உள்ளன. பிச்சைத் தேவராய் வந்தருளிய இறைவன் கூறிய மொழிகளும், அப்பெருமானை நோக்கிப் பிச்சையிட வந்த தலைவி கூறிய மொழிகளும் இத்தகைய சிலேடை அணிக்குரிய சிறந்த இலக்கியமாக அமைந்தமை முன்னர்க் கூறப்பட்டது. இவ்வாறே அடிகளார் பாடிய அருண்மொழிமாலை, இன்பமாலை என்பனவும் குறிப்பிற் பொருளுணர்த்தும் பல பொருள் தொடர்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குதல் காணலாம்.

தளிநான் மறையீர் ஒற்றிநகர்
     தழைத்து வாழ்வீர் தனிஞான
வொளிநா வரசை யைந்தெழுத்தா
     லுவரி கடத்தி னீரென்றேன்
களிநாவலனை யீரெழுத்தாற்
     கடலில் வீழ்த்தி னேமென்றார்
அளிநாண் குழலா யென்னடியவ்
     வையர் மொழிந்த அருண்மொழியே

(1743)

எனவரும் அருண்மொழி மாலைப் பாடல், ஆருயிர்த் தலைவனாகிய இறைவனுக்கும் அம்முதல்வன் பால் காதல் கொண்ட தலைவியாகிய தனக்கும் இடையே நிகழ்ந்த இனிய உரையாடல்களைத் தலைவி தோழிக்கு உரைப்பதாக அமைந்ததாகும். 'ஒற்றியூர்த் திருக்கோயிலில்