பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340


நான் மறைப்பொருளா யெழுந்தருளிய இறைவனே, ஒற்றி நகர் செல்வ வளத்தால் தழைக்கும் வண்ணம் வாழ்பவரே! ஒப்பற்ற சிவஞான ஒளி பெற்ற திருநாவுக் கரசரைத் திருவைந்தெழுத்தால் உவரி கடத்தினீர் (கடலினின்றும் கரையேற்றியருளினீர்) என்று கூறினேன். (அது கேட்ட இறைவர்) களிப்பு மிக்க நாவலூரில் தோன்றிய நம்பி ஆரூரனை இரண்டெழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்று கூறுகின்றார். வண்டுகள் மொய்க்கும் மலரணிந்த கூந்தலையுடைய தோழியே! அத்தலைவர் கூறிய அருண் மொழியின் பொருள் தான் என்னேடி” என்பது இப் பாடலின் பொருளாகும். இதன் கண், நாவரசை ஐந்தெழுத்தால் உவரி கடத்தினர் எனவரும் தலைவியின் கூற்று, நாவரசைத் திருவைந்தெழுத்தின் துணையால் கடலினின்றும் கரையேற உதவிய நீவிர் நும்பால் காதல் கொண்டு துயர்க் கடலில் வீழ்ந்து வருந்தும் என்னையும் கரையேற்றி உய்வித்தருள்வீராக என வேண்டும் குறிப்பினதாகும். (அதுகேட்ட இறைவர்) களி நாவலனை ஈரெழுத்தால் கடலில் வீழ்த்தினேம் எனக் கூறியது, 'கடலினின்றும் கரையேற்றுதல் மட்டும் எனது தொழிலன்று, அன்புடைய தோழர்களைக் கடலில் விழச்செய்து வேடிக்கை பார்த்தலும் எனது தொழிலேயாம்!' என்னும் குறிப்பினதாகும். இத்தொடரில் ஈரெழுத்து எனப் பட்டது, 'ஆசை' என்பதாகும். நாவலர் கோன் ஆரூரரின் உள்ள த்தில் தோன்றிய 'ஆசை' யென்னும் இரண்டு எழுத்தினால் (அவனைக்) கடலில் (பரவையில்) விழச் செய்தோம் என்பது இத்தொடரின் பொருளாகும். இங்குக் கடல் என்றது, அதன் பரியாயப் பெயராகிய 'பரவை' என்ற சொல்லால் நங்கை பரவையாரைக் குறித்து ஆளப்பெற்றதாகும். நங்கை பரவையாரைக் காதலித்த நம்பியாரூரர் பரவையாரை அடையவேண்டு மெனத் தம்பால் தோன்றிய ஆசை எழுகடலினும் பெரிய தாகம் எனத் தனித்திகுந்து இரங்குவதாக அமைந்தது,