பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350


தன்னை மறந்தாள் தன்நாமங் கெட்டாள்
     தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே!

(6–25–7)

எனவரும் அப்பர் அருள்மொழியை நினைவு படுத்துவதாகும்.

ஒற்றியூர்ப் பெருமானை விழைந்த தலைவியின் ஆருயிர் நாயகனாகிய இறைவன் பால் நாரை, கிளி, முதலிய பறவைகளைத் துாதுவிடுவதாக அமைந்தது 'நாரையும் கிளியும் நாட்டுறுதூது' என்னும் தலைப்பில் அமைந்த பதிகமாகும்.

கண்ணன் நெடுநாள் மண்ணிடந்தும்
     காணக் கிடையாக் கழலுடையார்
நண்ணும் ஒற்றி நகரார்க்கு நாராய்
     சென்று நவிற்றாயோ
அண்ணல் உனது பவனிகண்ட
     அன்றுமுதலாய் இன்றளவும்
உண்னு முணவோ டுறக்கமும்நீத்
     துற்றாள் என்றில் வொருமொழியே

(1503)

என்பது மேற்குறித்த பதிகத்தின் முதற்பாடலாகும். இப்பாடல்,

குட்டத்துங் குழிக் கரையுங் குளிர்பொய்கைத் தடத்தகத்தும்
இட்டத்தா லிரைதேரு மிருஞ்சிறகின் மடநாராய்
சிட்டன் சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வட்டவார் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே

(3-63-3)