பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352


யில் 'ஒற்றியிரும்' என்றுரைத்தேன். அதுகேட்ட தலைவர், நான் ஒற்றி (நெருங்கி)த் தானேயிருந்தேன் என்று கூறினார்' எனத் தலைவி தோழியை நோக்கிக் கூறுவதாக அமைந்தது இப்பாடல். இதன்கண் ஒற்றியிரும் என்ற சொல் எம்மைவிட்டுச் சிறிது தள்ளியிருப்பீராக என்ற பொருளில் தொண்டை நாட்டில் வழங்கும் வழக்குச் சொல்லாகும். ஒற்றியிருத்தல், தள்ளியிருத்தல், தள்ளியிருப்பீராக என்ற கருத்தில் ஒற்றியிரும் என்று வழக்குச் சொல்லால் தலைவி கூறினாளாக, அது கேட்ட தலைவர் அப்பொருளை உணராதவர்போல் நடித்து ஒற்றியிருந்தேன் (நெருங்கியிருந்தேன்) எனக் கூறியது, இருவர் கலந்துரையாடலில் நிகழ்ந்த இன்பமாகும். ஒற்றியிருந்தேன் எனவரும் இத்தொடர்க்கு ஒற்றியூரிலிருப்பவனே நான்' எனத் தலைவர் மறுமொழி கூறினாராகக் கொள்ளுதலும் ஒர் நயம். இவ்வாறே திருவருட்பா இரண்டாம் திருமுறையில் இன்பக்கிளவி முதல் இங்கிதமாலை ஈறாக உள்ள பகுதிகளும், ஆறாந் திருமுறையில் திருவடிப்பெருமை முதல் அநுபவமாலை ஈறாக உள்ள பகுதிகளும் அகத்துறைப் பாடல்களாகவே அமைந்துள்ளன.

கூத்தப்பெருமான் பால் காதல் கொண்ட தலைவி ஒருத்தி, அவ்விறைவரது திருவடிப் பெருமையைத் தன் தோழிக்கு விரித்துக் கூறுவதாக அமைந்தது, திருவடிப் பெருமை என்ற பனுவலாகும்.

திருவாளர் கனகசபைத் திருநடஞ் செய் தருள்வார்
     தேவர்சிகா மணிஎனக்குத் திருமாலை கொடுத்தார்
உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
     ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்