பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356


யாவர்கோன் என்னையும் வந்தாண்டுகொண்டான்
யாமார்க்கும் குடி அல்லோம் யாது மஞ்சோம்.

(திருவாசகம்-34)

என வரும் மணிவார்த்தையையும் நினைவுபடுத்துவது காணலாம். தன் ஆருயிர்த்தலைவராகிய இறைவரது வரவினை எதிர்பார்த்திருக்கும் தலைவி 'அவர்காலையிலே இங்கு வந்தமர்ந்தருள்வர்; ஆதலால் நம்மாளிகையை அலங்கரித்து வைப்பாயாக' எனத் தோழிக்கு உரைப்பதாக அமைந்தது, 'தலைவி கூறல்' என்ற தலைப்பில் அமைந்த பதிகமாகும்.

தந்தேகம் எனக்களித்தார் தம் அருளும் பொருளும்
தம்மையும் இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார்
எந்தேகம் அதிற்புகுந்தார் என் உளத்தே யிருந்தார்
என் உயிரில் கலந்த நடத் திறையவர் காலையிலே
வந்தேஇங் கமர்ந்தருள்வர் ஆதலினால் விரைந்தே
மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச்
சந்தேகம் இல்லை என்றன் தனித்தலைவர் வார்த்தை
சத்தியம் சத்தியம் மாதே சத்தியம்சத் தியமே.

(5704)

எனவரும் பாடல் இப்பதிகத்தின் முதற்பாடலாகும். இது 'தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னை' (39) எனவும் 'தன்னைத்தந்த என்னாரமுதை' (48) எனவும் 'காணும் கரணங்களெல்லலாம் பேரின் பமெனப் பேணுமடியார்' (633) எனவும் வரும் திருவாசகத் தொடர்களின் பொருளை அடியொற்றி அமைந்துள்ளமை காணலாம்.

அம்பலத்தே திருநடஞ்செய்யும் கூத்தப்பெருமானாகிய தன் ஆருயிர்த் தலைவனை அணைந்து இன்புறும் நிலையினைப் பெற்ற தலைவி தன் மணவாளனாகிய