பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

363


மென்பதனையும் தலைவி தோழிக்கு எடுத்துரைப்பதாக அமைந்தது,

மனையணைந்து மலர் அனைமேல் எனை அணைந்த போது
     மணவாளர் வடிவென்றும் எனது வடிவென்றும்
தனை நினைந்து பிரித்தறிந்த தில்லையடி எனைத்தான்
     சற்றுமறியேன் எனில்யான் மற்றறிவதென்னே
தினை அளவா யினும் விகற்பஉணர்ச்சி யென்பதிலையே
     திருவாளர் கலந்தபடி செப்புவதெப் படியோ
உனை அணைந்தால் இவ்வாறு நான்கேட்பேன் அப்போ
     துன்னறிவும் என்னறிவும் ஒரறிவாம் கானே.

(5729)

எனவரும் திருவருட்பாவாகும். பேரின்ப அனுபவம் இன்ன தன்மைத்தெனச் சொல்லால் வெளியிட்டு உரைக்க வொண்ணாத நிலையில் அப்பாற்பட்ட தென்பதனைச் சிற்றின்ப அநுபவத்தில்வைத்து விளக்குவது,

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்என்றாற் சொல்லுமா றெங்ஙனே.

(திருமந்திரம் 2944)

எனவரும் திருமூலநாயனார் அருளிய திருமந்திரமாகும்.

'கூத்தாடிக் கணவருக்கோ மாலையிட்டு மணந்தாய்' எனத் தன்னை வினவும் தோழியை நோக்கி, "பேதையே இப்பூமியினிடத்தும் வானுலகிலும் பாதலத்திலும் அண்டத்திலும் அண்டவெளியின் அப்புறத்தேயுள்ள அண்ட கோடிகளிலும் பதிந்து நிகழும் இயக்கத்தின் விளக்கமெல்லாம் என் தலைவர் தம் திருவடிமலர் கொண்டு திருஅம்பலத்தில் நிகழ்த்தும் திருக்கூத்தின்