பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

377


அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.

இத்தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து அவரவர்களையும் உரிமையுடையவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும். 'தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம் வந்தனம்' என்பது வள்ளலார் இறைவனை நோக்கிச் செய்துகொண்ட விண்ணப்பமாகும். உலகியல் வாழ்வில் அறிவு, திரு, ஆற்றல் என்னும் மூவகையாலும் வேறுபாடுடைய மக்களினத்தார் அனைவரும் சமுதாய வாழ்விலும் அரசியல் ஆட்சியிலும் ஒத்த சம உரிமையினைப் பெற்றும் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் முதலிய நுகர் பொருள்களைத் தடையின்றிப் பெற்றும், பசியும் பிணியும் பகையும் இன்றி இனிது வாழ்தலே உண்மையான சுதந்தர வாழ்வாகும். இத்தகைய மெய்ம்மையான சுதந்தர வாழ்வே உலக நாடுகள் அனைத்தினும் நிலைபெறுதல் வேண்டு மென்பதும், அவ்வாறு நிலைபெறுதற்கு இறைவனது திருவருட் சுதந்தரத்தனைப் பெறுதல் இன்றியமையாத தென்பதும், இத்தகைய நிறைவான சுதந்தரம் நிலை பெறுதற்குச் சன்மார்க்க நெறியினை மக்கள் கடைப்பிடித்து ஒழுகுதல் வேண்டுமென்பதும் மேற்குறித்த சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பத்தால் நன்கு விளங்கும். மக்கள் பெறுதற்குரிய எல்லாச் சுதந்தரங்களுக்கும் அடிப்படையான திருவருட் சுதந்தரத்தைப் பெற்றுப் பல்லுயிரனைத்தையும் மகவெனப் பாதுகாத் தருள் புரியும் செல்வக் கடவுள் தொண்டர்களின் நிலையுடைய நிறைவான சுதந்தர வாழ்வினை அறிவுறுத்தும் வகையில்மைந்தது,