பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

திருவருட்பாவின் தெளி பொருள்

ச. மெய்யப்பன் எம். ஏ அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி, நெடிய இலக் கிய வரலாற்றையும், வளத்தினையும், உடைய மொழி: காலந்தோறும் அறிஞர்கள் தோன்றித் தமிழுக்கு வளம் சேர்த்தனர். திருவள்ளுவர், திருமூலர், தேவாரமூவர். மணிவாசகர், திருநெறிய தமிழ் வளர்த்த அருளாளர்கள்.

பட்டினத்தாரும், தாயுமானவரும், தமிழின் தத்துவச் சிந்தனைக்கு வளம் சேர்த்த வள்ளல்கள். வாழையடி வாழை எனவரும் திருக்கூட்டத்தில் வந்த வள்ளலார், சோதியாய், சுடரொளியாய் வாழ்பவர்! ஒளி வழிபாட்டின் உயர்வு கண்டவர்.

சீவகாருண்யத்தை ஒழுக்க நெறியாக, வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியவர். பசிப்பிணி மருத்துவர்; தருமச் சாலை கண்ட தகைமைசால் தயவுருவர்; அருட்சோதி வழிபாட்டை அருளியவர்: ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமைக் கொள்கைக்கு வடிவம் கொடுத்து வளர்க்கும் அன்புருவர்.

சங்கம், சாலை, சபை என மூன்று அமைப்புகளாலும் பெரும்பணி செய்த பேரருளாளர். இந்திய மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் முதன்மையர். தமிழ்ச் சிந்தனையாளர்களில் தலையாயவர், புதுமைக்கவி பாரதிக்கும் முன்னோடி, வழிகாட்டி,