பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

379


சுதந்தர வாழ்வினைப் பெற வழிவகுத்த பெருமை தமிழ்ச் சான்றோராகிய அருட்பிரகாச வள்ளலார் ஒருவர்க்கே உரிய தனிச்சிறப்பு ஆகும் எனக் கூறுதல் மிகவும் பொருத்த முடையதாகும். சன்மார்க்கநெறி பரப்பிய இராமலிங்க வள்ளலார் இற்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னரே இறைவன் திருஅருளால் தெளிந்து வகைப்படுத்தி உணர்த்திய தேக சுதந்தரம், போக சுதந்தரம், சீவ சுதந்தரம், திருவருட் சுதந்தரம் ஆகிய சுதந்தர உணர்வுகளின் இயல்பினை மக்கள் எல்லோரும் நன்குணர்ந்து பயன்பெறும் வண்ணம் உலகமக்கள் அனைவர்க்கும் ஆங்கிலம் முதலிய பல்வேறு மொழிகளிலும் கட்டுரை வாயிலாகவும் சொற்பொழிவு வாயிலாகவும் அறிவித்தல் நம்காட்டு அறிஞர் பெருமக்களின் தலையாய கடமையாகும்.

எல்லாம் வல்ல இறைவனை அம்மையப்பனாகவும், அவனுடைய அருளாரின்பத்தினை நுகர்தற்குரிய உரிமை வாய்ந்த ஆன்மாவாகிய தம்மை அம்முதல்வனுடைய பிள்ளையாகவும் எண்ணி அன்பினால் நெஞ்சம் நெக்குருகிக் கற்போர் கேட்போர் சிந்திப்போராகிய எல்லோ ருள்ளத்தினையும் கசிவிக்கும் இனிய செந்தமிழ்ப் பனுவல்களாற் பாடிப் போற்றியவர் இராமலிங்க வள்ளலார். ஆதலின் அம்முதல்வனால் “நீ நம் பிள்ளை” என ஏற்றுக் கொள்ளப் பெற்றுத் 'திருவருட் சுதந்தரம்' பெற்ற செம்புலச் செல்வராயினர். இச்செய்தியினை,

துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித்தது நினைச்
     சூழ்ந்ததருள் ஒளி நிறைந்தே
சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே
     சுதந்தரமதானது லகில்
வன்பெலா நீக்கி நல்வழியெலாம் ஆக்கிமெய்
     வாழ்வெலாம் பெற்று மிகவும்