பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருமுறையும் திருவருட்பாவும்

நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞான சம்பந்தப் பிள்ளையாரை வழிபடு குருவாகக் கொண்டு, செந்தமிழும் வடமொழியும் ஆகிய இருமொழிகளிலும் அமைந்த மெய்ந்நூற் பொருள்களை ஒதாதுணர்ந்த மாதவச் செல்வர் இராமலிங்க அடிகள் என்பது முன்னர் விளக்கப்பெற்றது.

காழிக் கவுணியப் பிள்ளையார் மூன்று வயது குழந்தையாகிய பிள்ளைப் பருவத்திலேயே உமையம்மையார் அளித்த ஞானப்பாலடிசிலை உண்டு, தமிழ் ஞானசம்பந்தராய்த் தோடுடைய செவியன் முதலாக உள்ள திருநெறிய தமிழாகிய திருப்பதிகங்களைப் பாடி யருளினார் என்பது வரலாறு. பிள்ளையார் அருளிச் செய்த திருப்பதிகங்கள் பண்ணமைதி கருதி முதல் மூன்று திருமுறைகளாக வகுக்கப் பெற்றுள்ளன. ஆளுடைய பிள்ளையார் காலத்தவராகிய திருநாவுச்கரசர் அருளிச் செய்த திருப்பதிகங்கள், நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளாக வகுக்கப்பெற்றன. நம்பி ஆரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருப்பதிகங்கள் ஏழாம் திருமுறையாக அமைக்கப் பெற்றன. திருவாதவூரடிகளாகிய மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும் திருச்சிற்றம்பலக் கோவையும் எட்டாந் திருமுறையாகவும், திருமாளிகைத் தேவர் முதல் சேந்தனார் ஈறாக உள்ள ஆசிரியர் ஒன்ப