பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

388



பாடும் எம்படம் பக்க நாதன்தாள்
நாடு நாடிடில் நாடு நம்மதே.

(755)

என்பதாகும்.

இது, மேற்குறித்த ஞானசம்பந்தப் பிள்ளையார் அருளிய பாடலின் சொற்பொருள் அமைப்பினையும், யாப்பு அமைதியினையும் அடியொற்றி அமைந்துள்ளமை காணலாம். இதன்கண் 'மூவர்கள் பாடும் எம்படம்பக்க நாதன்' என்ற தொடர், தேவார ஆசிரியர்கள் மூவராலும் திருப்பதிகச் சொல் மாலைகளால் பாடிப் போற்றப் பெற்ற படம்பக்கநாதராகிய திருவொற்றியூர்ச் சிவபெருமானைக் குறித்ததாகும்.

இங்கெழுந்தருளிய இறைவன், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் என்னும் மூவரும் பாடிய தேவாரத் திருப்பதிகங்களை ஆர்வமுடன் கேட்டு அருள் புரிந்த திறத்தை,

'நாட நல்லிசை நல்கிய மூவர்தம்
பாடல் கேட்கும் படம்பக்க நாதரே'

(719)

எனவரும் அடிகளில் வள்ளலார் குறித்துப் போற்றியுள்ளமை இங்கு நினைக்கத்தகுவதாகும். சிந்தைக்கும், மொழிக்கும் எட்டாததும், தேவர் முதலியோர்களால் அறியப்படாததும் ஆகிய இறைவனது பொருள் சேர் புகழ்திறத்தினை நாவெனும் ஒரு பொறிக்கு மட்டும் சுவை பயப்பனவாகிய பாலும், கனியும், அமுதும் தேனும், கசப்புடையன என்று ஒதுக்கும்படி அவற்றினும் மேலாய்ப் பாடும் நாவுக்கும், கேட்கும் செவிக்கும், நினைக்கும் சிந்தைக்கும் தீஞ்சுவை பயக்கும், செந்தமிழ்ப் பாமாலைகளால் போற்றிப் பரவியவர் தேவார ஆசிரியர்கள் மூவருமாதலால் அவர்களால் பாடப்பெற்ற திருப்