பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

390


நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞான சம்பந்தப் பிள்ளயாரது கைமலர் வருந்தாதவாறு திருக்கோலக்கா இறைவர் பொற்றாளம் அளித்தருளிய செய்தியை 'ஓர்காழிப் பாலர்க்காக அன்று பசும் பொற்றாளங் கொடுத்த கோலக்கர் மேவும் கொடை யாளா' (1962-கண்ணி-16) எனவரும் தொடரில் வள்ளலார் குறித்துப்போற்றியுள்ளார்.

திருநெல்வாயில் அரத்துறையினை வழிபடச் சென்ற ஆளுடைய பிள்ளையார்க்கு அவர்தம் திருவடி வருந்தாதவாறு அரத்துறையீசர், முத்துச்சிவிகை, குடை, சின்னம் ஆகியவற்றை அளித்தருளினார் என்பது வரலாறு. இந்நிகழ்ச்சியினை,

"முன்னங்காழி வள்ளலுக்கு முத்துச்சிவிகை குடையொடுபொற்

சின்னம் அளித்தோன் சிவபெருமான்"
(1369)

எனவும்,

"எங்கள் காழிக் கவுணியரை எழில்கொள் சிவிகை ஏற்றி வைத்தார்"

(1660)

எனவும்,

தேரோங்கு காழிக்கண் மெய்ஞ்ஞானப் பாலுண்ட செம் மணியைச்
சீரோங்கு முத்துச் சிவிகையின் மேல்வைத்த தேவ!

(2361)

எனவும் வரும் தொடர்களில் வள்ளலார் குறித்துப் போற்றியுள்ளார்.

தன் மாமன் மகளை மணந்து கொள்ளும் விருப்பத்தால் அவளை உடனழைத்துக் கொண்டு செல்லும்