பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

394


அக்குடத்தில் வைக்கப்பெற்ற எலும்பிலிருந்து பூம்பாவை உயிர் பெற்றெழுந்தாள் என்பது வரலாறு.

ஆளுடைய பிள்ளையார் எலும்பைப் பெண்ணாக்கிய இவ்வருட்செயல், சிவமே தாமாகி ஏகனாகி இறைபணி நிற்கும் அவரது உயர்வறவுயர்ந்த பெருமைக்கு ஏற்ற எடுத்துக் காட்டாகும் வியப்புடைய செயலாகாது எனவும் அவருடைய பெரும் புகழை உள்ளவாறு உணர்ந்த பிறர் ஒருவர் எடுத்துக் கூறுவராயினும் வெறும் சாம்பலும் தெய்வ வடிவாய் உயிர் பெற்றெழுவதாகும் எனவும் அருட்பிரகாச வள்ளலார் ஆளுடைய பிள்ளையாரது சீர்த்தியை விரித்துப் போற்றுவதாக அமைந்தது,

பண்ணால் உன்சீரினைச்சம் பந்தர்சொல வெள்ளெ லும்பு
பெண் ணான தென்பார் பெரிதன்றே-அண்ணா அச்
சைவ வடி வாஞான சம்பந்தர் சீருரைக்கில்
தெய்வவடி வாம் சாம்பர் சேர்ந்து.

(திருவருட்பா 2008)

எனவரும் சிவநேச வெண்பாவாகும்.

இறந்த பூம்பாவையின் எலும்பினை உயிர்பெற்றெழும்படி ஞானசம்பந்தர் செய்த இவ்வருட் செயலானது, சிறிய போகத்தை நல்கும் அமிழ்தத்தை உணவாக உண்டு நெடுங்காலம் வாழ எண்ணிய தேவர்களை நோக்கி வானுலகம் இகழ்ந்து நகைப்பதற்கு ஏதுவாயிற்று என்னும், கருத்தமைய வள்ளலார் ஞானசம்பந்தரைப் போற்றியதாக அமைந்த பாடல்,

நல்லமுதாம் சிவை தான் தரக் கொண்டுநின் நற்செவிக்குச்
சொல்லமுதந் தந்த எங்கள் பிரான் வளஞ்சூழ்மயிலை