பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

398


வள்ளலார் குறித்துப் போற்றியுள்ளமை காணலாம். இவ்வாறு ஞானசம்பந்தப் பிள்ளையாரை முருகப் பெருமானது திருஅவதாரமாகப் போற்றி வழிபடு மரபு கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணியிலும், கந்தரநுபூதி பெற்றுக் கந்தரநுபூதி பாடிய அருணகிரிநாதர் அருளிய திருப்புகழிலும், சிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர்ச் சந்நிதி முறையிலும் இடம்பெற்றுள்ளமை இங்கு ஒப்பு நோக்குதற் குரியதாகும்.

பிறவிப் பெருங்கடலிற்பட்டுக் கரை காணாது வருந்தும் இயல்பினராகிய மக்கள் திருஞானசம்பந்தரது திருமணத்தைக் கண்டு உடன்சேவித்துச் செல்லும் நற்பேற்றினாலே நல்லூர்ப்பெருமணத் திருக்கோயிலில் தோன்றிய ஈறில் பெருஞ்சோதியிலே புகுந்து பிறவா நெறியாகிய பேரின்ப வாழ்வைத் தலைப்பட்டார்கள் என்னும் இவ்வரலாற்று நிகழ்ச்சியை உளங்கொண்டு நெஞ்சம் நெக்குருகிய வள்ளலார், இறைவனை நோக்கி முறையிடுவதாக அமைந்தது,

எங்கோவே யான்புகலி எம்பெருமான் தன்மணத்தில்
அங்கோர் பொருட் சுமையாள் ஆனேனேல்-இங்கேநின்
தாள்வருந்த வேண்டேன் தடைப்பட்டேன் ஆதலினிந்
நாள் வருந்த வேண்டுகின்றேன் நான்.

(2009)

எனவரும் திருவருட்பாவாகும்.

'எம் ஆருயிர்த் தலைவனாகிய இறைவனே, புகலிப் பதியில் தோன்றிய எம்பிரான் சம்பந்தரது திருமணத்தில் மனத்திற்கு வேண்டும் பொருட்களைத் தூக்கிச் செல்லும் பணியாட்களுள் ஒருவனாக யான் இருந்திருப்பேனானால் இவ்விடத்தே நின் திருவடி வருந்தும்படி பலமுறையும் வணங்கி வேண்டும் நிலையில் நினக்குச் சுமையாக இருக்கமாட்டேன். அத்திருமணத்தில் கலந்து கொள்ளாத