பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

400


தெளிந்ததாகவும் அருட்பிரகாச வள்ளலார் படிப்படியாகத் தாம் பெற்ற திருவருள் விளக்கத்தைக் கூத்தப் பெருமானை நோக்கிக் கூறுவதாக அமைந்தது,

திருநெறிமெய்த் தமிழ்மறையாம் திருக்கடைக் காப்பதனால்
     திருவுளங்காட்டிய நாளில் தெரிந்திலன் இச்சிறியேன்
பெருநெறி என் உளத்திருந்து காட்டியநா ளறிந்தேன்
     பிழைபடாத் தெய்வமறை யிதுவெனப்பின் புணர்ந்தேன்
ஒருநெறியில் எனதுகரத் துவந்தளித்த நாளில்
     உணராத உளவையெல்லாம் ஒருங்குணர்ந்து தெளிந்தேன்
தெருள்நெறிதந் தருளுமறைச் சிலம்பணித்த பதத்தாள்
     சிவகாம வல்லிமகிழ் திருநடத் தெள்ளமுதே.

(2802)

என வரும் திருவருட்பாத் திருவருள்விலாசத் தலைப்பின் இரண்டாவது பாடலாகும்.

திருஞானசம்பந்தர் அருளிய மேற்குறித்த திருக்கடைக் காப்புப் பாடலில் 'பெருநெறி' எனவும், 'திருநெறி' எனவும் குறிக்கப்பட்டது, வள்ளலார் மேற்கொண் டொழுகிய சமரசசுத்த சன்மார்க்க நெறியாகும். இந்நுட்பம்,

திருநெறியொன்றே யதுதான் சமரசசன் மார்க்கச்
     சிவநெறியென் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமினீண்டு
வருநெறியி லெனை யாட்கொண் டருளமுத மளித்து
     வல்லப சத்திகளெல்லாம் வழங்கிய ஓர் வள்ளல்
பெருநெறியிற் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்
     பெருங்கருணை வடிவினொடு வருதருண மிதுவே