பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

407


பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானைப் 'பிறப்பிலான் எங்கள் பரசிவ பெருமான்' - (884) என வள்ளலார் போற்றியுள்ளமை 'பிறப்பில் பெருமானைப் பின் தாழ் சடையானை' (1-80-2) எனவரும் திருஞான சம்பந்தர் தேவாரத்தை அடிஒற்றி அமைந்துள்ளமை காணலாம்.

இவ்வாறே அருட்பிரகாச வள்ளலார் சைவசமய ஆசிரியர் நால்வருள் திருநாவுக்கரசர், நம்பியாரூரர், மாணிக்கவாசகர் அருளிய திருமுறைகளையும், திருமூலர் முதல் சேக்கிழார் நாயனார் ஈறாகவுள்ள ஏனையோர் அருளிய திருமுறைகளையும் தாம்பாடிய திருவருட்பாவில் எடுத்தாண்டு பொருள்விளக்கம் செய்துள்ளார்கள் அத்தகைய ஒப்புமைப் பகுதிகள் நிரம்பவுள்ளன. அவையனைத்தும் ஒருதனி நூலாக வெளிவரத்தக்கன. ஆதலின் திரு முறையும் திருவருட்பாவும் என்ற இப்பகுதி இவ்வளவில் நிறைவு செய்யப் பெறுகிறது.

வாழி எனைத்தூக்கி வைத்த கரதலங்கள்
வாழிஎலாம் வல்ல மணிமன்றம் - வாழிநடம்
வாழி அருட்சோதி வாழி நடராயன்
வாழி சிவ ஞான வழி.