பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் 14-1-1917இல் பிறந்தவர் பேராசிரியர் வெள்ளைவாரணனார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற அறிஞர். முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றவர். 1935 முதல் 1979 வரை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பல்வேறு நிலையில் பணியாற்றினார். மொழிப்புலம் முதன்மையராக அவர் வீற்றிருந்தபொழுது இயற்றிய ஆராய்ச்சி நூல்கள் பல. அவை அவருக்கும் பல்கலைக் கழகத்திற்கும் பேரும் புகழும் தந்தன. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பொழுது (1980 - 1982) தொல்காப்பியத்திற்கு விரிவான விளக்க உரை வரைந்தார்கள். 1982 - 1984 தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத் துறைத் தலைவராக இருந்த பொழுது சங்க இலக்கிய செய்திக் களஞ்சியம் உருவாக உதவினார். தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மொழிப்புல முதன்மையராகவும் திகழ்ந்தார். திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர், திருமுறை உரைமணி, கலைமாமணி முதலிய சிறப்புப் பட்டங்களைப் பெற்றவர். திருமுறை வரலாறு, தொல்காப்பிய உரைவளம், இவரின் இரு கண்கள். விபுலானந்தர், சோமசுந்தர பாரதியார் போன்ற சான்றோரின் பெருந்தொண்டர். தூய வாழ்வினர்.