பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும் மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்றறிந்தேன் உனக்கும் விளம்புகின்றேன்.' (திருவருட்பா-5803)

சிவம் ஒன்றே என்று வற்புறுத்திய அடிகளார், 'பெருந்தாயாம் மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க வயங்குமணிப் பொது விளங்க வளர்ந்த சிவக்கொழுந்தே' என அம்மையப்பர் என இரு மையின் வைத்துப் போற்றியது எவ்வாறு பொருந்தும் எனச் சிலர் வினவுதல் கூடும். இவ்வினாவுக்கு விடையாக அமைந்தது 'ஒன்றுமலார் இரண்டுமலார் ஒன்றிரண்டு மானார்' (திருவருட்பா 3282) என வரும் திருவருட்பாத் தொடராகும்.

'ஞாயிறு' என்னும் ஒருபொருளே உலகப்பொருளில் தோய்ந்து விளக்கு மிடத்துக் 'கதிர்' என்னும் பெயரும், தன்னை விளக்குமிடத்துக் 'கதிரோன்' என்னும் பெயரும் பெற்று இருதிறப்பட்டு இயைந்து நிற்குமாறுபோல, பேரறிவாகிய முழுமுதற்பொருள் ஒன்றே உலகுயிர்களாகிய புறப்பொருளை நோக்கி நிற்கும் நிலையில் சத்தி என்னும் பெயரும், அறிவு மாத்திரமாய் நிற்கும் தன்னிலையில் சிவம் என்னும் பெயரும் பெற்று ஒருமைத் தன்மையின்கண் இருதிறப்பட்டு இயைந்து, குணமும் குணியுமாய் (பண்பும் பண்புடைப் பொருளுமாய்)த் திகழ்தலால் அம்மையும் அப்பனுமாகிய அப்பெருமானை

“ஒன்றுமலார், இரண்டுமலார், ஒன்றிரண்டுமானார்”

என அருட்பிரகாச வள்ளலார் குறிப்பிட்டமை பொருத்த முடையதேயாகும், இவ்வாறு அருட்சத்திக்கும் சிவபரம்