பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சமயங்களின் தோற்றமும் வளர்ச்சியும்


எல்லாம் வல்ல இறைவனை அம்மையப்பர் திருவுருவில் அமைத்து வழிபடும் வழிபாடு தொன்மை வாய்ந்ததாகும். திருச்செங்கோடு என்னும் மலைமேல் வழிபடப்பெறும் அர்த்தநாரீசுவரர் திருவுருவம், உமையொருபாகர் வழிபாட்டின் தொன்மையினைப் புலப்படுத்துவதாகும்.

தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளை நீறும் பசுஞ் சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையுமுடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ!

(திருவாசகம்-18. திருக்கோத்தும்பி)

என மாணிக்கவாசகர் அருளிய திருப்பாடல் உமையொருபாகர் திருக்கோலத்தின் எழில் நலத்தினையும் அதன் தொன்மையினையும் விரித்துப் போற்றுதல் காணலாம்.

தமிழகத்தில் மாயோன் சேயோன் கொற்றவை முதலாகப் பல்வேறு திருவுருவங்களில் வைத்து வழிபடப்பெறும் எல்லாத் தெய்வங்களும் முழுமுதற்கடவுளாகிய பரம்பொருள் தன்னை வழிபடும் அன்பர்களின் உள்ளத்திற்கேற்ப மேற்கொண்ட அருள்வெளித் தோற்றமே என்னும் மெய்ம்மையினைத் தெரிந்துணர்ந்தவர்கள் சங்க