பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


குறித்து வழிபடுதற்குரிய குறியாகவும், அடையாளமாகவும் அமைந்ததே இச்சிவலிங்கத் திருமேனியாகும். ஆராத பேரன்புடையராய் அறுவகைக் குற்றங்களையும் ஒழித்து, ஐம்புலன்களையும் அடக்கி இறைவனருளிய அருள் ஞானத்தைப் பெற்ற பெருந்தவ முனிவரது உள்ளத்துள்ளே சோதி வடிவாய்த் திகழும் இறைவனது அருள் திருமேனியின் அமைப்பினைப் புலப்படுத்தும் குறியாக அமைந்ததே சிவலிங்கத் திருமேனி. சிவலிங்கத்தின் அடிப்பீடம் ஆன்மாக்களின் நெஞ்சத் தாமரையாகவும், அதன்நடுவே நாட்டப்பெற்ற பாணம் அவ் உயிர்களின் உள்ளத்தில் எழும் சோதிப்பொருளாகிய இறைவனாகவும் கொண்டு அமைந்ததே சிவலிங்கத் திருஉருவம், இவ்வுண்மை 'மலர் மிசை ஏகினான்’ என்னும் வள்ளுவர் வாய்மொழியாலும் 'மலர்மிசை எழுதரு பொருள்' (1-21-5) எனவரும் ஆளுடைய பிள்ளையார் திருவாக்காலும் புலனாதல் காணலாம்.

'எரியாய தாமரைமேல் இயங்கினாரும்'

(6–1 6–7)

எனவரும் நாவுக்கரசர் அருள்மொழியும்,

'நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலே ஒர் நால்விரல்'

(7–45–9)

எனவரும் சுந்தரர் வாய்மொழியும் இக்கருத்தினைப் புலப்படுத்தல் காணலாம். இவ்வாறு எல்லார்க்கும் பொதுவாகத் தோன்றிய சிவலிங்க வழிபாடு இறைவனை உருவமாகக் கொண்டு வழிபடும் பொதுமக்கள் வழிபாட்டிற்கும், அருவமாகக் கொண்டு வழிபடும் சிவயோகிகள் வழிபாட்டிற்கும் இடைப்பட்டதாய்ப் பொதுமையின் அமைந்தமையின்