பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42


இது தெய்வக் கொள்கையுடைய பல சமயத்தார்க்கும் பொதுமையுடையதாகவே அமைந்து வந்துள்ளது.

தெய்வம் உண்டு என்னும் தெளிவு பெறாத மீமாம்சகர், வைசேடிகர். நையாயிகர் முதலியோரும் வைதிகத்திற்குப் புறம்பான அருகர், புத்தர் முதலிய சமயத்தாரும் தத்தம் கொள்கைகளில் மாறுபாடுடையவராய்த் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனராயினும், அன்னோர் தத்தம் சமய ஆசிரியர்களை வழிபடும் வழிபாட்டுத் திறத்தில் ஒருமையுடையராதலை உலகியலிற் காண்கிறோம். இவ்வாறு மக்கட் குலத்தார் தெய்வம் உண்டென்னும் தெளிவு பெறாத நிலையிலும், தங்களை அன்பினால் நல்வழிப்படுத்தும் தந்தை, தாய், ஆசிரியன் முதலிய பெரியோர்களை நோக்கிச் செய்யும் வழிபாடுகள் எல்லாவற்றையும் உலக முதல்வனாகிய இறைவனே ஏற்றுக் கொண்டு அருள்புரிகின்றான் என்பது திருமுறை ஆசிரியர்கள் முதலிய சிவநெறிச் செல்வர்களின் துணிபாகும். தெய்வத்தை உடன்படுவனவும், உடன்படாதனவுமாக உலகில் வழங்கும் சமயங்கள் யாவும் மக்களை அவரவர் தம் பக்குவ நிலைமைக்கு ஏற்பப் படிப்படியாக உயரச் செய்து பேரின்பம் அளிக்கும் பெருங் கருணைத் திறத்தால் உலகமுதல்வனாகிய இறைவனால் வகுத்தருளிச் செய்யப் பெற்றனவே என்பது நம் முன்னோர் கண்ட உண்மையாகும். இவ்வாறு உலகச் சமயங்கள் எல்லாம் இறைவன் ஒருவனாலேயே படிகால்முறையாக அமைக்கப்பட்டன என்னும் இந் நுட்பம்,

ஆரிருள் அண்டம் வைத்தார் அறுவகைச்
சமயம் வைத்தார்.

(4–30–5)

எனவும், 'முறை முறை நெறிகள் வைத்தார்' (4-38-7) எனவும்,