பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


'பேணித் தொழுமவர் பொன்னுலகாளப் பிறங்கருளால்,
ஏணிப்படிநெறி இட்டுக் கொடுத் திமையோர் முடிமேல்
மாணிக்கமொத்து மரகதம் போன்று வயிர மன்னி
ஆணிக் கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே'

(4—92–16)

எனவும் வரும் அப்பரடிகள் வாய் மொழிகளால் இனிது புலனாகும்.

கடவுட் கொள்கை யென்னும் உள்ளீடில்லாத சமயங்களை: 'இருமுச் சமயத்து ஒருபேய்த் தேர்' (திருவாசகம் திருஅண்டப் பகுதி 79) எனவும், கடவுட் கொள்கையுடை அகச்சமயங்களைத் 'திருத்தகும் அறுவகைச் சமயம்' (திருஅண்டப்பகுதி 16-17) எனவும், மணி வாசகப் பெருமான் குறிப்பிடுவதால் அவர்காலத்து அகச்சமயம் அறுவகையாகவும், புறச்சமயம் அறுவகையாகவும் வழங்கின எனக் கருத வேண்டியுளது. சாருவாகம் (உலகாயதம்), முதலிய எல்லாச் சமயமும் இறைவன் ஒருவனாலேயே அருளிச் செய்யப்பெற்றமையின் அவ்வச் சமயத்தார் அளவில் அவை பிரமாணமாகக் கொள்ளத் தக்கனவே. மந்த உணர்வினராய மக்கள், உலக இன்பமே பெரும்பயன் எனவும், தமக்குப் புறம்பாயுள்ள உடம்பு முதலியவற்றை ஆன்மா எனவும் அபிமானம் செய்து உழலும் நிலையின் அன்னோர்க்கு இரங்கிய இறைவன், துன்பம் முதலியவற்றோடு விரவுவதால் உலக இன்பம் பேருறுதிப்பயன் அன்று எனவும், உடம்பு முதலியன ஆன்மா அல்ல எனவும் உணர்த்தி, அவர்களது உணர்வு அவ்வளவில் நிலை