பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


என மாதவச் சிவஞான முனிவர் தரும் விளக்கம் இங்கு எண்ணத் தகுவதாகும்.

இனி, பலவகைச் சமயங்களிலிருந்தும் இறைவனை, உண்மையாகப் போற்றும் அன்பர்கள் எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் அவரவர் நினைந்த திருமேனி கொண்டு அங்கங்கே தோன்றி அருள் புரிதல் இறைவனது இயல் பென்பதும், கடவுட்கொள்கையில்லாத பிற சமயத்தாரும் தத்தம் சமயத் தலைவர்களை நோக்கிச் செய்யும் வழிபாடுகள் யாவும், முழுமுதற் பொருளாகிய கடவுள் ஒருவரையே சென்று சாரும் என்பதும் முன்னைய அருளாசியர் துணிபாகும்

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு
இங்கே என்று அருள்புரியும் எம்பெருமான்.

(2-40-8)

என ஆளுடைய பிள்ளையாரும்,

'ஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்'

(6–18--11)

'பாராழி வட்டத்தார் பரவியிட்ட
பன்மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும்'

(6–18—5)

'இரு நிலத்தார் இன்புற்று அங்கு ஏத்துமடி
இன்புற்றார் இட்டபூ ஏறுமடி'

(6–6—5)

என ஆளுடை அரசரும்,