பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

'அறிவினான் மிக்க அறுவகைச்சமயம்
அவ்வவர்க் கங்கே ஆரருள் புரிந்து'

(7-55-9)

என ஆளுடைய நம்பிகளும் அருளிய அருளுரைகளைக் கூர்ந்து நோக்குங்கால், பலசமயங்களால் போற்றப்படும் எல்லாத் தெய்வங்களாகவும் முன்னின்று அருள் புரிவோன் எல்லாம் வல்ல சிவபெருமானே என்னும் உண்மை திருமுறை ஆசிரியர்களின் துணிபாதல் நன்கு புலனாகும்.

மக்கள் தங்கள் குறுகிய நோக்கத்தால் வேறுபட்டுத் தமக்கெனப் புதியனவாகச் சமயங்களைக் கற்பித்துக் கொண்டாலும், அன்னோர் கற்பனைகளுக்கெல்லாம் தானுமுடனாய் நின்று அருள் செய்யும் இயல்புடையோன் இறைவன் என்பதனை,

'வாதுசெய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள்
யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம்
மாதவ னல்லால் தேவர் மற்றில்லையே'

(5–100–4)

எனவும்,

'விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்'

(4–60–10)

எ ன வு ம் திருநாவுக்கரசர் தெளிவுபடுத்தியுள்ளமை காணலாம்.

ஏணிப்படி நெறிகளாக அமைக்கப் பெற்ற அகம் புறமென்னும் அறுவகைச் சமயங்களிலும் ஒழுகும்