பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51


எருது வாகனனாம் எயில்கள் மூன்றெரித்த
ஏறுசேவகனுமாம் பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் கங்கை
கொண்ட சோளேச் சரத் தானே'

என வரும் கருவூர்த்தேவர் திருவிசைப்பாவாகும்.

இதுகாறும் எடுத்துக் காட்டியவற்றால் தெய்வங் கொள்கையுடையாரும், அக்கொள்கையினை உடன்படா தாருமாகிய எல்லாச் சமயத்தார் செய்யும் வழிபாடுகளும் முழுமுதற் பொருளாகிய இறைவன் ஒருவனையே சாருமென்பதும், பல சமயத்தாரும் தத்தம் தத்துவக் கொள்கைகள் காரணமாக முரண்பட்டு நிற்கும் சமயப் பிணக்கங்களில் ஈடுபட்டு மக்கள், தம்முள் மாறுபட்டுக் கலாம் விளைத்தல் இறைவனது அருட்குறிப்புக்கு மாறான செய்கை என்பதும் திருமுறை ஆசிரியர்கள் மேற்கொண் டொழுகிய சமயப் பொதுநிலைக் கொள்கை (சைவத்தின் சமரசம்) ஆதல் நன்கு புலனாதல் காணலாம்.

இவ்வாறு சங்ககாலம் முதலாக நம் நாட்டில் நிலவி வரும் சமயப் பொதுநிலைக் கொள்கைக்கு மாறான மதப்பூசல்களும், மதச்சடங்குகளும், பிற்காலத்தில் பெருகிய சாதி வேறுபாடுகளும் தமிழகத்திற் பரவி நாட்டு மக்களின் ஒற்றுமையுணர்வினைச் சிதைத்துப் புறநாட்டவருக்கு நம்மை அடிமைப்படுத்திய இருட்காலத்தே இறைவனது அருளால் தோன்றியவர் அருட்பிரகாச வள்ளலார். மக்கள் அனைவரையும் ஒரு குலத்தவராகக் கருதி மன்னுயிர்களுக்கெல்லாம் அன்பு செய்யும் அருள் நலம் வாய்ந்த அடிகளார், தம் காலத்தின் சமய வேறுபாடுகளால் நிலவிய பகைமையுணர்ச்சியைப் போக்கி எல்லாச்சமயவழிபாடுகளும் முழுமுதற் பொருளாகிய ஒன்றையே சென்று சார்வன என முன்னோர் கொண்