பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56


என வரும் இத் தொடரையே திருவருட்பிரகாச வள்ளலார் தாம் பரப்ப எண்ணிய சுத்தசன்மார்க்கத்திற்குரிய மந்திர மொழியாக அறிவுறுத்தியுளார். இவ்வுண்மை வள்ளலாரின் பேருபதேசமாகிய உரைநடைப் பகுதியாலும், விண்ணப்பங்களாலும் அருட்பெருஞ்சோதி அகவலாலும் நன்கு தெளியப்படும். 'தயவு, கருணை, அருள்' என்பவை ஒரு பொருளையே குறிக்கும்; ஆதலால் பெரிய பெருந்தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம் {சொல்வின் பொருள்). 'இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் முடிவான இன்பாதுபவம் பெறுவதற்குத் தடையில்லை' 'சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அது தான் வந்து முற்றும் (தாயுமானார்-கருணாகரக் கடவுள்) என்னும் பிரமானத்தால் உணர்க' என வள்ளலார் தாம் அறிவுறுத்திய திருமந்திரத்தின் பொருளைச் சுருக்கமாக விளக்கியுள்ளமை காணலாம்.

அருளே திருமேனியாகக் கொண்ட இறைவனை அகத்தும் புறத்தும் பொருளாகக் கொண்டு இடைவிடாது நினைந்து போற்றும் அடியவர் உள்ளத்துள்ளே அம்முதல்வனது பெருங்கருணை வெள்ளம் அகத்தேயும் நிறைந்து புறத்தேயும் வெளிப்பட்டு உலகில் துன்புறும் உயிர்களது துயர்களைத் துடைக்கும் பற்றுக்கோடாய் விளங்கும் என்பது,

கருணை நிறைந்து அகப்புறமும் துளும்பி வழிந்
துயிர்க் கெல்லாம் களை கண் ஆகித்
தெருள் நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற
கண்ணுடையோய் சிதையா ஞானப்
பொருள் நிறைந்த மறையமுதம் பொழிகின்ற
மலர்வாயோய் பொய்ய னேன்றன்