பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58


அறிவு இச்சை தொழில்களையும் மறைந்து நிற்கும் ஆணவமாகிய அகவிருளைப் போக்கும் பொருட்டு உயிர்களின் சிந்தையில் தோன்றி நின்றருளும் திருவருள் ஒளியினை உடம்பினகத்தே உயிர்களின் உள்ளே தோன்றும் இவ்வொளியினைப் பிண்ட ஒளி என்பர் பெரியோர். (பிண்டம். உடல்), 'இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழுலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற பேரொளி' என்றது, அண்டங்களிலுள்ள ஞாயிறு விண்மீன் முதலிய எல்லாப் போருள்களுக்கும்- ஒளிவழங்குவதாய் அண்டங்களைக் கடந்து தோன்றும் பேரொளியினை. இதனை அகண்ட வொளி என்பர் அறிஞர் இதன் இயல்பினை,

அண்டமாரிரு ஆளுடு கடந்தும்பர்
உண்டு போலுமோர் ஒண்சுடர் அச்சுடர்
கண்டிங் காரறிவார் அறிவாரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே.

(5-97-3)

எனவரும் திருக்குறுந் தொகையில் திருநாவுக்கரசர் விளக்கியருளிய திறம் நினைந்து போற்றற் குரியதாகும். இங்ஙனம் எல்லாம் வல்ல இறைவன் தன்னிற் பிரிவிலா அருளையே திருமேனியாகக் கொண்டு உயிர்களின் அகத்திலும் அண்டங்களின் உள்ளும் புறமும் சோதிப் பொருளாகத் திகழும் திறத்தினை,

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர் விட்டுளன் எங்கள் சோதி
மாதுக்கம் நீக்கலுறுவீர் மனம் பற்றி வாழ்மின்
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே.

(3- 54 - 5)

எனவரும் திருப்பாசுரத்துள் ஆளுடைய பிள்ளையார் விளக்கியுள்ளமை அறிதற் குரியதாகும். இத்திருப்பாசுரத்