பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66


ஆருயிர்க்கு என்போடியைந்த தொடர்பு' (குறள்-78) என வரும் திருக்குறளாகும். 'காணாமரபினதாகிய உயிர்க்குக் காணப்படும் உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை அன்பென்னும் உயிர்ப்பண்பினை வளர்த்தற் பொருட்டு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்' என்பது இதன் பொருளாகும். அருவாகிய உயிர்கள் உருவாகிய உடம்பினைப் பெற்றல்லது தம்முள் அன்பினை வளர்த்தல் இயலாமையால் அன்பாகிய உயிர்ப்பண்பினை வளர்த்தற் பொருட்டே அருவாகிய உயிர்க்கு உருவாகிய உடம்பு அளிக்கப் பெற்றது என்பதாம். புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி’ என்றாங்குப் புல்முதல் மக்கள் ஈறாகிய உடம்புகள் உயிர்க்குப் படிகால் முறையாகப் படைத்து வழங்கப் பெற்றன என்பர் பெரியோர். இத்தகைய உயிரினத்தில் உயர்திணை எனப் போற்றப் பெறும் மன உணர்வினைப் பெற்ற மக்கட் கூட்டத்தார் இல்வாழ்க்கைக்கண் நின்று மனை, மக்கள், சுற்றம், நட்பு என எல்லோரிடத்தும் அன்புடையராய் வாழ்ந்ததின் பயனாகவே பேரின்பமாகிய வீடுபேற்றினைப் பேறுதற்குரியர் என்பது 'அன்புற்றமர்ந்த வழக்கென்ப வையகத் தின்புற்றா ரெய்தும் சிறப்பு’ (அன்புடைமை-5) என வரும் திருக்குறளால் அறிவுறுத்தப் பெற்றது.

ஒரறிவுயிராகிய புல்முதல் ஆறறிவு உயிராகிய மக்கள் ஈறாக எல்லா உயிர்களும் தாம் பெற்றுள்ள உடம்புகளால் வேறுபட்டுத் தோன்றினும், ஊழ்வினை காரணமாகப் பிறக்கும் பிறப்பு இயல்பினால் ஒத்த தன்மை யுடையனவே என்பது, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க் கும்' (972) எனவரும் வள்ளுவர் வாய்மொழியால் நன்கு விளங்கும. உயிர்கள் செய்த நன்றும் தீதுமாகிய இருவினைப் பயன்களைச் செய்த உயிர்களே அனுபவிக்கும்படி வரையறுத்து ஊட்டுவது ஊழாகிய நியதி தத்துவமென்ப, இறைவனது ஆணையாகிய திருவருட்