பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68


பேராறாக இழியும் நிலையினை யொத்தது உலகினை இயக்கு ம் பேராற்றலினால் முறைப்படுத்தப்படும் ஊழாகிய நியதி என்பதும், அவ்வாற்றினால் ஈர்த்துச் செல்லப்படும் மிதவை (தெப்பம்) போன்றது மன்னுயிர்த் தொகுதி என்பதும், ஊழின் வயப்பட்ட உயிர்கள் உலகிற் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு இனங்களிலும், பிறந்தும், இறந்தும் உழன்று இருவினைப் பயன்களை நுகர்தலின், அவ்வுயிர்கட்கு யாதும் ஊரே, யாவரும் உறவினரே என்பதும், மக்கள் அடையும் நன்றும் தீதும் ஆகியன பிறரால் தரப்படுவன அல்ல, அவரவர் செய்த வினையின் பயனாகத் தாமே வருவன என்பதும், உலகிலேயே மக்கள் பெறும் உயர்வு தாழ்வுகட்கு அன்னோர் இயற்றிய இருவினைப்பயனாகிய ஊழ் என்னும் முறைமையே காரணமாதலால் நல்வினையால் உயர்ந்த பெருமக்களை வியந்து புகழ்தலையோ, அன்றித் தீவினையால் தாழ்வுற்ற சிறியவர்களை எண்ணி இகழ்தலையோ மெய்யுணர்ந்தோராகிய தத்துவ ஞானிகள் ஒருபோதும் மேற்கொள்ளமாட்டார்கள் என்பதுமாகிய உண்மைகள் இப்பாடலில் தெளிவுபடுத்தப் பெற்றுள்ளமை காணலாம்.

படைப்புக் காலந் தொடங்கி மன்னுயிர்கள் ஊழ்வினை காரணமாகப் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு உடம்புகளிலும் பிறந்திறந்து அலமருநிலையில், அவ்வுயிர்கட்கு யாதும் ஊராகவும், யாவரும் உறவினராகவும் அமைந்துள்ள திறத்தினை,

அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமும் தோன்ற நீ நினைந்தநாள் தொடங்கி
எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாயராகியும் தந்தையராகியும்