பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi


பேருழைப்பு ஞாலம் உய்ய வழிகாட்டும் என்பது என் நம்பிக்கை.

அறிவு சான்ற ஆய்வு நூல்களை அளித்துப் பேரும் புகழும் பெற்று வருவது மணிவாசகர் பதிப்பகம். பேராசிரியர் வெள்ளைவாரணனார் சொல்ல எந்தையார் எழுத யானே வெளியிட என்ன புண்ணியம் செய்தேனோ என எண்ணி இப்பிறப்பில் எழு பிறப்பில் பெற்ற பயனை எய்துகிறேன். நல்ல நூலுக்குப் பதிப்புரை எழுதும் இந்த வேளையில் “பல்லோர் உவகை எல்லாம் என்னுட் பெய்தது” போன்ற இன்பவுணர்வு எய்துகிறேன். வள்ளலார் புகழுக்கு எல்லை வாழ்த்துவோர் நா எல்லை.

மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் அவர்கள் தமது அணிந்துரையில் வள்ளலாரின் தமிழ்க் கொடையினையும், தனிக் கொடையினையும் கண்டு தெளிவாக்கியுள்ளார்கள் வள்ளலார் வழங்கிய அருங் கருத்துக்களின் நலங்களைத் தம் நுண்மாண் நுழைபுலத்தால் விளக்கியுள்ளார்கள்.

வாழையடி வாழையாயினும், தாங்கள் தனித்தன்மை கொண்டு திகழ்கின்ற பாங்கினைத் தெளிவுறுத்திய திறம் யாவரும் வியந்து போற்றுதற்குரியது. தாம் மதித்துப் போற்றும் சான்றோர்களான திருமுறைச்செல்வர் க. வெள்ளைவாரணனார், வடலூர் மாதவர் குங்குலியம் பழ. சண்முகனார் இவர்களின் கூட்டு முயற்சியை மூதறிஞர் வ. சுப. அவர்கள் உவந்துவந்து போற்றுகின்றார்.

மணிவாசகர் பதிப்பகத்திற்குப் பல்லாற்றானும் பெருமை சேர்க்கும் பேரறிஞர் மாணிக்கனார் அவர்கட்கு எம் உளங்கனிந்த நன்றி