பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


உயிரோடு வைக்கமாட்டேன் எனச்சினமுற்று மணிமேகலையைச் சிறையினின்றும் விடுவித்து, அவளைப் புழுக்கறையில் அடைத்துப் பலவாறு துன்புறுத்தினாள். தான் பெற்ற மந்திர ஆற்றலால் அத்துன்பங்களை யெல்லாம் பொறுத்துக் கொண்ட மணிமேகலை, சிறிதும் மாற்றமின்றிக் காணப்பட்டாள். அதனைக் கண்டு வியந்த அரசமாதேவி நடுக்கமுற்றவளாய், என் மகனை இழந்த துன்பத்தால் உனக்கு இத்தகைய கொடுமைகளைச் செய்தேன். இவற்றைப் பொறுத்தருள வேண்டும் என மணிமேகலையைப் பலவாறு வேண்டினாள். அது கேட்ட மணிமேகலை, சென்ற பிறப்பில் நீலபதியின் வயிற்றில் தோன்றிய 'இராகுலன்’ என்பவனைத் திட்டிவிடம் என்ற பாம்பு தீண்ட அவன் இறந்த பொழுது, அவன் மனைவியாக இருந்த யான் அத்துயரத்தைப் பொறாது தீயிற் பாய்ந்து உயிர் துறந்தேன். அவ்விராகுலனே இப் பிறப்பில் உனக்கு மகனாக வந்த உதயகுமாரனாவான். அவன் முன்பிறப்பில் பாம்பு தீண்டி இறந்தபொழுது அவனது பிரிவாற்றாது யான் தீப்பாய்ந்து உயிர் விட்ட அந்நாளில் இளங்கோவாகிய அவன்பொருட்டு அரசியாகிய நீ எங்கிருந்து அழுதாய்? அப்பொழுது அவனுக்கும் உனக்கும், மகன்-தாய் என்னும் உறவு முறைமை இன்மையின் அழாதிருந்தாயல்லவா? பூங்கொடி போல்பவளே! இப்பொழுது அவன் உன் மகனாகிய நிலையில் இறந்த பொழுது பிற உயிர்க்குத் தீங்கு செய்தலாகிய பொருந்தாத செயல்களைச் செய்துவிட்டாய். இனி நீ நின் மகனது உடலை நினைந்து அழுதாயா? அல்லது அவனது உயிரை நினைந்து அழுதாயா? உடலை நினைந்து அழுதாயானால் அவனது உடம்பையும் (எண்ணெய் முதலிய பாதுகாப்புப் பொருளில்) பேணிவைக்காமல் அதனை இடு காட்டில் இட்டவர்கள் யார்? இல்லை, உயிரை நினைந்து அழுதாயானால், அவ்வுயிர் சென்று புகும் உடம்பு அவ்