பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72


இறைவனையடைவதற்குச் சாதனமாகிய அன்பும் அதனால் அடையத்தகும் பயனாகிய சிவமும் என அன்பையும், சிவத்தையும் இருவேறு பொருளாகப் பிரித்துரைப்பர் அவற்றின் இயல்பினை அறியாதார். உயிர்களிடத்துக் காணப்படும் அன்பே சிவ பரம்பொருளின் விரிந்த விளக்கமாகும், என்பதை எத்துணை யறிஞர்களும் உள்ளவாறு அறிய மாட்டாராயினர். உயிர்ப்பண்பாகிய அன்பே சிவத்துவ விளக்கமாகும் என்னும் இம் மெய்மையினை யாவரும் (அனுபவத்தால்) அழுந்தி அறிந்த பின்னர் அன்னோர் எவ்வுயிரிடத்தும் விரிந்து விளங்குவதாய்த் தம்பால் நிலைபெற்ற அன்பே சிவமாகி விரிந்து தோன்ற அத்தகைய சிவத்தின் வியாபகத்துள்ளே (விரிவினுள்ளே) அன்புருவாய்ப் பிரிப்பின்றி அமர்ந்திருந்தார்கள் என்பது இத்திருமந்திரத்தின் பொருளாகும்.

எவ்வுயிரும் நீங்காதுறையும் இறையாகிய சிவத்தின் விரிந்த விளக்கமே உயிர்களிடத்துக் காணும் அன்பாகிய பண்பெணவுணர்ந்து அன்புருவாகிய பரமசிவனிடத்தே நீங்காத போன்புடையராய் வழிபட்டு ஒழுகுவோரே எல்லாவுயிர்க்கும் அன்புடையார் தமக்கும் அன்புடையார் ஆவர். இவ்வுண்மையை உணராதார் அன்பு சிவம் என்பன தனித்த இரு வேறு பொருள்கள் என்றெண்ணிப் பிழைபடப் பேசுவார் என்பார், 'அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்” என்றார்.

உயிர்க்குணமாகிய அன்பு என்பது சிவபரம் பொருளின் திருவுருவ விளக்கமேயன்றி அதனின் வேறாய பிறிதொரு பொருளன்று என்பார், 'அன்பே சிவமாவது” என்றார். ஈறிலாப்பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே; 'அன்பினில் விளைந்த ஆரமுதே' என்பன திருவாசகம், சிவத்துவ விளக்கமாகிய