பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76


ஆன்ம நேய ஒருமைப்பாட்டுணர்வு தோன்றும் என்னும் உண்மை புலப்படுத்தப் பட்டமை இங்கு நினைவிற் கொள்ளத்தக்கதாகும்.

எவ்வுயிர்க்கும் உயிராய், அன்பே உருவாய்த்திகழும் சிவபரம் பொருளிடத்தே உண்மையான அன்பினைச் செலுத்த எண்ணுவோர் அப்பரம் பொருள் எழுந்தருளியுள்ள கோயில்களாகத் திகழும் ஆருயிர்களிடத்திலே உண்மையான அன்பினைச் செலுத்துதல் வேண்டு மென அறிவுறுத்துவது,

எவ்வுயிரும் நீங்காது உறையும் இறை சிவமென்று
‘எவ்வுயிர்க்கும் அன்பாயிரு'

(சைவசமயநெறி)

எனவரும் முன்னைச்சான்றோர் வாய் மொழியாகும்.

எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணிஇரங்கவும் நின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பரா பரமே!

(தாயு-பராபரக்கண்ணி 65)

எனவரும் தாயுமானவர் பாடலும் இக்கருத்தை வலியுறுத்தல் காணலாம். மேற் குறித்த வண்ணம் தாம் பெற்ற தெய்வ அருட்கருணையால் ஆருயிர்கட்கெலாம் நான் அன்பு செயல் வேண்டுமென இறைவனை இறைஞ்சி எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணும் தபோதனருள் ஒருவராகிய அருட்பிரகாசவள்ளலார், இக்கால மக்கள் உய்திபெறும் நிலையில் அறிவுறுத்திய செந்நெறிக் கொள்கையே” “ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை யாகும். இத்தகைய ஒருமைப்பாட்டின் விளக்கமாக அமைந்தன,