பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75


பேசுவதென் அறிவிலாப் பினங்களை நாமிணங்கிற்
பிறப்பினினும் இறப்பினினும் பிணங்கிடுவர் விடுநீ

(சிவஞானசித்தியார் சுபக்கம்-323)

எனவரும் அருள்நந்தி சிவனார் வாய்மொழியும் இங்கு நோக்கத் தகுவதாகும்.

"ஈசனுக்கன்பில்லார், அடியவர்க்கன்பிலார், எவ்வுயிர்க்குமன்பில்லார் தமக்குமன்பிலார் என மேற்காட்டிய சித்தியார் தொடர், சிந்தனைக் கெட்டாத சிவ பரம்பொருளைச் சிந்தனைக்குரிய பொருளாகக் கொண்டு வழிபடும் கால் 'மாலற நேயம் மலிந்தவராகிய' அடியார் திருவேடமே அன்பினால் வழிபடத்தக்கது. ஆதலின் அடியாரிடத்து உண்மையன்பு செலுத்தாதவர்கள் இறைவனிடத்தும் உண்மையான அன்பில்லாதவர்கள். ஈசன் கோயிலாகிய எவ்வுயிர்க்கும் அன்பில்லாதவர்கள், ஆகவே தம்மிடத்தும் உண்மையான அன்பில்லாதவர்களே" என்னும் உண்மையினை வலியுறுத்தும் முறையில் அமைந்ததாதலின், “அடியவர்க் கன்பில்லார், ஈசனுக்கன்பிலார், எனவே எவ்வுயிர்க்கும் அன்பிலார் தமக்கும் அன்பிலார்” என முடித்துக் கூறும் நிலையில் இத்தொடருக்குப் பொருள் காண்பார் முன்னையோர். மகவெனப் பல்லுயிரனைத்தையும் ஒக்கப் பார்க்கும் செல்வக்கடவுள் தொண்டராகிய அடியார்களிடத்தே செலுத்தும் அன்பானது அவர்தம் உயிர்க்குயிராய் உள் நின்ற ஈசனிடத்தும் அவ்வடியார்களால் பேணிக்காக்கப்படும் ஆருயிர்களிடத்தும் இரு பாலும் ஒப்பச் செல்லும் என்பதனை அருணந்திசிவனார் இத்தொடராற் புலப்படுத்தியுள்ளமை காணலாம். அடியாரிடத்துச் செலுத்தும் அன்பே ஆருயிர்களிடத்தும் செல்லும் என்னும் இக் குறிப்பினால் அருளாளர்களது உள்ளத்திலிருந்தே