பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும்
ஒருதிருப் பொது என அறிந்தேன்
செயி ரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து
மலர்ந்தனன் சுத்த சன்மார்க்கப்
பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்
பாடுகின்றேன் பொதுப்பாட்டே!

(திருவருட்பா-5426)

எவ்வுயிரும் பொதுவெனக் கண்டிரங்கி உப
கரிக்கின்றார் யாவர் அந்தச்
செவ்வியர்தம் செயலனைத்தும் திருவருளின்
செயல் எனவே தெரிந்தேன் இங்கே
கவ்வை இலாத் திருநெறி அத்திருவாளர்
தமக்கேவல் களிப்பால் செய்ய
ஒவ்வியதென் கருத்தவர் சீர் ஒதிடஎன்
வாய்மிகவும் ஊர்வ தாலோ.

(திருவருட்பா-5295)

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம் பெருமான் நடம்புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தை மிக விழைந்த தாலோ.

(திருவருட்பா-5298)