பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 4

49 முதல் 56 வரை பொற்பதம் என்றும் (பதம்-திருவடி.),

57 முதல் 65 வரை பூம்பதம் என்றும், -

66 முதல் 70 வரை பதம் என்றும்,

71, 72ஆம் வரிகளில் மறை துதிக்கும் பதம் என்றும்,

73 முதல் 76 வரை பிரமன் பரவும் பதம் என்றும்,

77 முதல் 82 வரை மால் வணங்கும் பதம் என்றும்,

83 முதல் 90 வரை உருத்திரர் முதலானோர் ஏத்தும் பதம் என்றும்,

91இல் அம்மை வருடும் பதம் என்றும்,

92இல் அடர்த்தருள் பதம் என்றும்,

93,94, 96, 97ஆம் வரிகளில் அடியவர்க்கு அருளும் பதம் என்றும் ,

98 முதல் 106 வரை தேவார மூவர்க்கு அருளிய பதம் என்றும்,

95, 107, 108 ஆம் வரிகளில் மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்திய பதம் என்றும்,

109 முதல் 111 வரை அன்பர்க்கு அருளும் பதம் என்றும்,

112 முதல் 115 வரை தாமரை போலும் பதம் என்றும்,

110 முதல் 122 வரை வள்ளற் பெருமானுக்கு அருளும் பதம் என்றும்,

123 முதல் 128 வரை எல்லார்க்கும் இன்பு உதவுகின்ற பதம் என்றும்,

பரசிவத்தின் திருவடிப் புகழ்ச்சி ஓதப்பெற்றுள்ளது.

      5.பரசிவத்தின் பொது 
          இலக்கணம் 
      (வரி 1 முதல் 34 வரை)

பரசிவம், சின்மயம், பூரணம், சச்சிதானந்தம், பரமஞானம், பரமசாந்தம், பரமசோதிமயம், பரம்பரம், அனந்தம், அசலம், அகோசரம், அஷயம், புனிதம், கற்பனாதீதம், தத் எனும் பதம் அமலம், நவந்தரு பேதமும் அதீதமும், பரமபோகம், பரமயோகம், சித்தாந்த வேதாந்த சமரசம், சர்வமங்களம், சர்வசக்தி தரம் என்றாற் போன்ற 127 வடசொற்றொடர்களால் பரசிவத்தின் பொதுவிலக்கணம் கூறப்பட்டுள்ளது. (127 வடசொற்றொடர்களும் அவற்றின் பொருளும் பிற்சேர்க்கையில் காணலாம்.)

     6.பரசிவத்தின் சிறப்பு 
           இலக்கணம்

வரி 36 முதல் 48 வரை பரசிவத்தின் சிறப்பிலக்கணம்

பொருந்திய சிவ மூர்த்தங்கள் முதலியன கூறப்பட்டுள்ளன. அவை வருமாறு :