பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6

ஈசான முதல் ஆகிய ஐவகைச் சக்தி" மூர்த்த ங்களும் தனக்கே உரியனவாவது (54);

சவிகற்பமாகவும் , நிர்விகற்பமாகவும்" காட்சிப் படுவதற்குக் காரணமாகிய சக்திகட்கு ஆதாரமாக விளங்குவது (55);

தடமாய்", நிரூபமாய்,' " அவிவர்த்தமாகும் சமர்த்தாய்’ ’ விளங்கும் சிவசக்தியின் உருவமாகத் திகழ்வது. (56).

(2) பூம்பதம் (57-65)

கெடாத சாந்தம் நிலவும் சிவபதமும், துவாதசாந்தப் பதமும்' ' தருவது (57):

சகலர், ! பிரளயாகலர், ' விஞ்ஞானகலர்' என மூவகைப் படும் ஆன்மாக்களின் மனத்தில் இருந்து உணர்த்தி உதவி செய்வது

அணுபக்கம்’ ’, சம்புபக்கம்’ ஆகிய இரண்டிலும் போக நுகர்வில் சமநிலையில் அருள் புரிவது (59):

தூலம்", சூக்குமம்', பரம்’ ஆகிய மூன்று உருவநிலை களுள்ளும் உயிராக விளங்குவது (60);



6. ஈசானம். தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம் ,

7. சவிகற்பம் - பெயர் உரு முதலியவற்றோடு கூடியது.

8. நிர்விகற்பம் - பொருள் அளவில் உணரப்படுவது.

9. உருவம் குணம் முதலியன விளங்கும் நிலை.

10. உருவம் முதலியன காணமுடியாத பொதுநிலை.

11. பொருள்கள் நிலை மாறித் தோன்றுவது.

12. பொருள்கள் மாறிய நிலைமையை உண்டாக்கும் தன்மை.

13. சாந்தம் - மாயப்பாழ் போதப்பாழ் உபசாந்தப்பாழ் என 3. சாந்த நிலை மூன்று (திருமூலர் திருமந்திரம் 2495. 2500).

14. தலையுச்சியில் பிரம ரந்தரத்துக்கு மேல் பன்னிரண்டு அங்குலத்தில் யோகக் காட்சிக்குப் புலனாகும் சிவபதம்.

15. சகலர், மலம் கன்மம் மாயை என்ற மும்மல முடையர்.

16. பிரளயா கலர், மலம் கன்மம் என்ற இருமலமுடையர்.

17. விஞ்ஞான கலர், ஒருமலமுடையர்.

18. அணு - ஆன்மா.

19. சிவனால் அதிட்டிக்கப்பட்டு இயங்கும் உருத்திரன் மால் அயன் இந்திரன் முதலியவர்கள்.

20. பொறி புலன்களுக்கு அறியப்படுவது, தூலம்.

21. மனத்தான் அறியப்படுவது, சூக்குமம்.

22. தூலம் சூக்குமம் இவற்றுககு மேலாய்க் காரணமாயிருப்பது.