இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
(4)மறை துதிக்கும் பதம்(71,72)
மறைதுதிப்பது; மறைச்சிலம்பு ஒளிர்வது; மறையே பாதுகை யாக விளங்குவது; (71): ."
மறைகளின் முடிமணியாக விளங்குவது; மறைகளுக்கு எட்டாதது; மறைகள் நான்கையும் குதிரைகளாகக் கொண்டது(72).
(5)பிரமன் பரவும் பதம்(73-76)
மறையவன் உள்ளத்திற் பரவுவது; கோடிக்கணக்கான மறையவர் சிரமேற் கொண்டு வணங்குவது (73)
பிரமன் 'சிரசிகாமணி' என்று புகழ்ந்து பரவுவது (74);
பிரமனுக்கு உலகத்தைப் படைக்கும் அதிகாரம் அருளியது (75);
பிரமன் கனவினும் காணாதது; பிரமன் பரவுவது (76);
(6)மால் வணங்கும் பதம்(77-82)
திருமாலாகிய இடபத்தை ஊர்வது; நெடுமால் அருச்சிப்பது(77);
மால்பரவி நாடொறும் வணங்குவது; தாமரை போன்ற தன்
கண்ணை மலராக இட்டு வணங்கியது (78);
மால் பன்றியுருக்கொண்டு தேடியது; பலகோடி திருமாலின் தசை நீங்கிய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்தது (79);
திருமால் முடிமீது அணியாக விளங்குவது; திருமால் உள்ளத் தில் எழுந்தருள்வது; மாலும் அறிவதற்கு அரிதாகியது (80).
திருமால் எடுத்த பத்து அவதாரங்களிலும் வழிபட்ட பெருமையுடையது (81); -
திருமால் உலகத்தைக் காக்கும் தொழில் பெற்றுப் பணிவாக இருத்தற்கு அருள் புரிந்தது (82).
(7) உருத்திரன் முதலானோர் ஏத்தும் பதம் (83-90)
கயிலையில் பத்தியாய்ச் சிவப்பணி புரியும் உருத்திரர்கள் புகழ்ந்து பரவுவது; வயஉருத்திரர்கள் சூழ்ந்து துதிப்பது (33)
உருத்திரர்கள் படைத்தளித்தழிக்கும் முத்தொழிலையும் செய்தற்கு அருள் செய்வது (84)