பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 11

மதுரை மாநகரின் கண் இசைவல்ல பாணபத்திரன்பொருட்டு, விறகு. விற்பவனாகத் தெருத்தோறும் திரிந்தருளியது (107);

மாணிக்கவாசகர் பொருட்டு, வந்திக்குக் கூலியாளாக வந்து வைகைக்கரையை படைக்குங்கால், மண் உடம்பெலாம் படப் பன் முறையும் விளையாடியது (108).

   (13) அன்பர்க்கு அருளும் பதம் 
        (109-111)

எவ்விடத்து அன்பர் உளர். அவ்விடத்தே அவர்கட்கு நலந்தர எழுந்தருள்வது (109);

எவ்வண்ணம் அருள்புரிய வேண்டும் என்று அன்பர்கள் விரும்பு கின்றனரோ அவ்வண்ணம் அன்றே அருள்தருவது (110);

என்னைப்போன்ற அடியவர்கட்கும் பொன்போலும் அருள் தந்து இதயத்து எழுந்தருளியிருப்பது (111).

   (14) தாமரை போலும் பதம் 
          (112-13)


என் உயிர் போன்றது; என் உயிர்க்கு உயிராய் விளங்குவது; செம்பதுமம் போல்வது (112);

என் அறிவாய் விளங்குவது; என் அறிவினுக்கு அறிவாய் இருப்பது; செங்கமலம் போல்வது (113);

என் அன்பு எனப்படுவது; என் அன்புக்கு வித்தாய் அமைந்தது கோகனகம் போல்வது (114);

என் தவம் ஆவது: என் மெய்த்தவப் பயனாய் அமைந்தது' செஞ்சலசம் போல் விளங்குவது (115).

   (15) வள்ளற் பெருமானுக்கு 
    அருளும் பதம் (116.122)

என் இருகண் மணியானது; என் கண்மணிகளுக்கு இனிய நல்விருந்தாக இருப்பது (116);

என் செல்வமாவது: என் மெய்ச்செல்வ வருவா யெனும் தாமரை போல்வது (117);

என் பெரிய வாழ்வானது; எனக்குப் பெருமகிழ்ச்சி தருவது எனக்குச் சங்கநிதி பதும நிதி போன்ற அரிய செல்வமாகியது (118); எனக்குத் தந்தை தாய் எனப்படுவது; எனக்கு உறவாக விளங்குவது; எனக்கு நட்பாய் விளங்குவது (119);

எனக்குக் குருவாய் விளங்குவது; எனக்கு இட்ட தெய்வமாக அருள்புரிவது; என் குல தெய்வமாக விளங்குவது (120);