13
'அண்டப் பகுதியின் உண்டைப் பெருக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன’’
என்று பாடியுள்ளார் (வரி 1 - 4) .
பொருள்கள்
பொருள்கள் தூலம், சூக்குமம், பரம் என மூவகையினவாம் (வரி 60).
பொறி புலன்களுக்கு அறிய நிற்கும் நிலை, தூலம். மனத்துக்கு உணர்வாய் நிற்கும் நிலை, சூக்குமம். அவற்றுக்கு மேலாய்க் காரணமாயிருப்பது, பரம்.
உயிர்த்தொகுதிகள்
இவை சரம் என்றும் அசரம் என்றும் பிரிக்கப்படும் (61); சரம் என்பது இயங்குவது; அசரம் என்பது இயங்காமலிருப்பது.
எழுவகைப் பிறப்பும் கூறப்படுகிறது. அவை தேவர் மக்கள் விலங்கு பறவை ஊர்வன நீர்வாழ்வன தாவரம் என்பன (121).
தத்துவங்கள் (வரி 63) தத்துவங்கள் முப்பத்தாறு :
பூதம் ஐந்து - மண், நீர், அனல், காற்று, ஆகாயம்;
பொறி ஐந்து ஞானேந்திரியம் - மெய், வாய், கண், மூக்கு, செவி;
புலன் ஐந்து - ஓசை, பரிசம், உருவம், சுவை, நாற்றம்;
செயற்கருவி கன்மேந்திரியம் - வாக்குபாதம்,பாணி, குதம், உபத்தம்;
கரணம் நான்கு - மனம், புத்தி,சித்தம், அகங்காரம்;
வித்தியாதத்துவம் 7 - கலை, வித்தை. அசாகம், காலம்,நியதி புருடன்,மாயை.
சிவதத்துவம் 5 -சிவம்,சக்தி,சதாசிவம், ஈசுவரம் சுத்தவித்தை; ஆகத் தத்துவம் முப்பத்தாறு.
தாத்துவிகங்கள் (வரி 63)
தத்துவங்களின் உட்கூறுகளாகிய தாத்துவிகங்கன் அறுபது அவையாவன :-
பிருதிவியின் கூறு : (5) எலும்பு, தசை, மயிர், தோல், நரம்பு;