பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அப்புவின் கூறு : (5) சிறுநீர். இரத்தம், சிலேத்துமம், வியர்வை, சுக்கிலம் அல்லது சுரோணிதம்

தேயுவின் கூறு : (5) இருதய வெப்பம், பசித்தீ, கண்ணில் வெப்பம், உடம்பில் வெப்பம், பைத்தியம்;

வாயுவின் கூறு : (10) உதானன், பிராணன், அபானன், தமானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன்,

ஆகாயத்தின் கூறு : (10) சுத்தி, அலம்புடை, இடை, பிங்கலை, சுழுமுனை. காந்தாரி, குகுதை, சங்கினி, சிகுவை, புருஷன்;

கன்மேந்திர விடயம் : (5) வசனம், கமணம், தானம், விசர்க்கம்; ஆனந்தம்;

ஞானேந்திரியவிடயம் :(5) சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்

அகங்காரத்தின் கூறு : (3) தைசதம், வைகாரிகம், பூதாதி;

குற்றம் : (5) காமம், குரோதம், லோபம், மோகம், மதம், (மாற்சரியம் - குரோதத்துள் அடங்கும்);

குணத்தின் கூறு : (3) சாத்துவிகம் - இராசதம், தாமதம்:

வாக்கு : (4) குக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி.

சைவசித்தாந்தம் :

வேதங்கள் நான்கு; வேதங்களின் அந்தம் வேதாந்தம் எனப் பெறும். வேதங்களின் அந்தமாக இருப்பது உபநிடதம். உபநிடதங் களின் உச்சியில் விரிந்து தோன்றும் பல்வகைக் கருத்துக்கள் சிவாகமங்கள். இவை வேதாந்தம் அல்லது சித்தாந்தம் என்றும் கூறப்படும்.

‘'வேதாந்தத் தெளிவாம் சைவசித் தாந்தம்’ ’

என்று உமாபதிசிவம், சிவப்பிரகாசம் என்னும் நூலிலும் (செ.7), குமரகுருபரர், பண்டார மும்மணிக்கோவை செய்யுள் 11 இல் (வரி 32 - 35),

'ஓரும் வேதாந்தமென் றுச்சியிற் பழுத்த

சாரங் கொண்ட சைவசித் தாந்தத்தேன்'

என்றும் கூறியுள்ளனர்.