பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

I6

அரக்கனை மலைக்கீழ் அடர்த்த பதம்’ (94) என்றவிடத்தும் இராவணன் செய்தி குறிக்கப்பட்டது.

பாற்கடலைக்கடைந்தபொழுது ஆலகாலவிடம் தோன்றியது.

அதனை இறைவன் பருகிக் கண்டத்தில் நிறுத்தினார். அதனால் மணிகண்டன் எனப்பட்டார் (37).

கலை பலவும் தேய்ந்து சுருங்கிய சந்திரனைத் தலையில் சூடிக் கலைகள் வளரச் செய்த பான்மைபற்றிச் சந்திரசேகரன் எனப் பட்டார் (39) .

"தடமதில்கள் அவை மூன்றும் தழலெரித்த அந்நாளில், இடப மதாய்த் தாங்கினான் திருமால்' என்ப ஆகலின் (திருவாசகம் திருச்சாழல், 15) எம்பெருமான் இடபவாகனன் எனப்பட்டார் (39).

பகீரதன் தவத்திற்கிசைந்து மண்ணுலகிற்கு இறங்கிவந்த கங்கையின் வேகத்தைத் தடுத்துத் தன் சடையில் தாங்கியமையின் கங்காதரன் எனப்பட்டார் (39).

உமைகேள்வன் ஆதலின் உமாபதி ஆயினார் (40) .

மும்மலத்தால் பிணிப்புண்டு வருந்தும் உயிர்களைக் கட்டறுத்து வீடுபெறச் செய்யும் தலைவனாகலின் பசுபதி எனப் பட்டார் (40).

ஊழியிறுதியில் தான் ஒருவனேயிருக்க மற்றைத் தேவர்கள் இறந்துபட அவர்தம் தலைகளை மாலையாக அணிந்திருத்தலின் தலைமாலை பூண்டவன் என்று குறிக்கப்படுகிறார் (41).

முப்புரத்தவரை எறிந்தபொழுது இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணனாகத் திகழ்ந்தமையின், 'வடதிசைச் சைல மெனும் ஒரு வில்லவன்’ எனப்பட்டார் (42).

கயிலையில் கல்லாலின் புடையமர்ந்து நான் மறை ஆறங்க முதல் கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் அறம் உரைத் தருளியவர் தட்சிணாமூர்த்தி.

இரு நிலனாய்த் தீயாகி நீரு மாகி

இயமான னாய்எறியும் காற்று மாகி

அருகிலைய திங்களாய் ஞாயி றாகி

ஆகாச மாய் அட்ட மூர்த்தி யாகி’


என்று , நின்ற திருத்தாண்டகத்தில் அப்பர் விரித்துரைத்த வண்ணம் பரசிவம் அட்டமூர்த்தி ஆயினார் (43).