பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

17

இன்பம் ஆக்கலின் சம்பு எனப் பெயர்பெற்றார்.

பிரமனும் திருமாலும் தாமே பெரியர் என்று பிணங்கிய பொழுது பரசிவம் முடியும் அடியும் கண்டறியுமாறு தாணு வாய் (அமுற்பிழம்பாகிய தூண் வடிவில்) நின்றமையின் தாணு எனப் பட்டார் (45).

யானையுருக்கொண்ட கயாகரனைக் கொன்று அவன் தோலைப் போர்த்துக் கொண்டமையின் 'கடாசலவுரிப் போர்வையான்' எனப்பட்டார் (46).

மார்க்கண்டேயன் பொருட்டு இயமனைக் காலால் உதைத் மையின் காலகாலன் ஆயினார் (47) . . "மறலியை யுதைத்தருள் கமும்பகம்' என்பர் வரி 92 இல்.

பரசிவம்

பரசிவம் சின்மயமானது (அறிவுருவாயது): பூரணம் (நிறைந்தது.) (வரி 1) :

தன்மயம்(பிறிதொன்றின் கலப்பில்லது); சத்சித் ஆனந்தமாக விளங்குவது (2):

நிட்களமாயது (உருவில்லாதது) (4);

ஆன்மாக்களின் பிறப்புத் தொடர்பைப் போக்குவதற்குச் சகள மாவது (உருவொடு கூடியது) (5):

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தல் இவன் இறைவன் எண்றெழுதிக் காட்டொணாதது -(நிராகரம் - வரி 12);

பதியாய் இருப்பது (வரி 13);

பஞ்ச கிருத்திய சுத்த கர்த்தத்துவமுடையது (வரி 14) படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐந்தொழில்கள் புரிவது; ஐந்தொழில்கள் புரிந்தாலும் நிருவிகாரியாய் விருப்பது (வரி 16).

சூரியவொளியில் சில பிறக்கின்றன; சில வளர்கின்றன; சில இறக்கின்றன. எனினும் சூரியன் அவற்றால் விகாரம் இலன்; அது போல, இறைவனும் விகாரமிலனாம். இதனைச் சிவஞான

சித்தியார், சுபக்கம் செ.33 இல்,