பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

19

உருத்திரன் அயன் திருமால் என உருவத் திருமேனி நான்கு சதாசிவம் என்ற அருவுருவத் திருமேனி ஒன்று; ஆக ஒன்பது. (சிவஞான சித்தியார், சுபக்கம், மூன்றாம் சூத்திரம், செ. 74).

'மறைச்சிலம்பு ஒளிர்பதம்', 'மறைப் பாதுகைச் செம்பதம்" (வரி 71)

என்றமையால் மறை பரசிவத்துக்குச் சிலம்பாகவும் பாதுகையாகவும் விளங்குதல் அறியப்பெறும். "மறைப்பரியுகைக்கும் பதம்' என்றமையால் (வரி 72) மறை பரியாதல் பெறப்படும். திரிபுரம் எரிக்கச் சென்றபோது, தேர்க்கு நான்கு மறைகளும் குதிரைகள் ஆயின என்பதும் 'மால் விடை இவர்ந்திடும் பதம்' (வரி 71) என்றவிடத்துத் திருமால் இடபமாக வந்தார் என்பதும் பெறப்படும்.

பரையின் செய்தி == *

பராசக்தி வடிவாம் (49); சிற்சக்தி வடிவாம் (50); இச்சா பானம் கிரியை என்னும் முச்சத்தி வடிவாம் (51) என்றவற்றால் பசல்வம் பிரிப்பரிதாய ஐவகைச் சக்திகளோடு உள்ளமை பெறப் படும்.

'பரசிவத்தின் ஆயிரத்தொரு கூறு பராசக்தி: பராசக்தியின் ஆயிரக்கொருகூறு ஆதிசக்தி: ஆதிசக்தியின் ஆயிரத்தொரு கூறு இச்சாசக்தி; இச்சாசக்தியின் ஆயிரத்தொருகூறு ஞானசக்தி; ஞான சக்தியின் ஆயிரத்தொருகூறு கிரியாசக்தி” (சிவஞான சித்தியார் பைக்கம் - மங்கலவாழ்த்து - சிவசக்தி - செ. 2 இன் சிவாக்கிர யோகிகள் உரை).

பrசிவம் தன் சிற்சத்தியினின்று மாயையை வெளிப்படுத்தி, அதனின்று விக்கு என்னும் சுத்தமாயையினையும், மோகினி என்றும் அசுத்த மாயையினையும், மான் என்னும் பிரகிருதி மாயையினையும் தொழிற் படுத்துவர். -

மேலே கூறிய ஐஞ்சக்திகளின் வேறாய் ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோ சாதம் என்ற ஐந்து சக்தி மூர்த்தங் அள் பெசப்படும் (வரி 54).

இவை முறையே அனுக்கிரகம், திரோதானம், சங்காரம், நிதி, சிருஷ்டிக்காகத் தோன்றியவை.

இவற்றுள் ஈசானம், உயர்வுடைய சிவபதம் தருவது;

தற்புருடம், விந்துநாத விருத்தியான ஒசை ஒலிகளை ~x^2чеуі