பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

22

அணு: ஆன்மாவுக்கு அணு என்றும் பெயருண்டு, விரிந்த ஒளிப்பண்பினதாகிய ஆன்மா, மலத்தால் பிணிப்புற்றுச் சுருங்கி அணுத்தன்மையெய்துதலால் அணு எனப்பெறும் (வரி 59)

ஆணவ மலம், சகச மலம் எனப்படும் (வரி 64). உயிரைப் பற்றியிருக்கும் மூவகை மலங்களுள், மாயை கன்மம் என்ற இரண்டையும் செயற்கை மலம் என்பர். ஆணவ மலம் இயற்கை மலம் எனப்படும். (இயற்கையைச் சகசம் என்றும், செயற்கையை ஆகந்துகம் என்றும் குறிப்பிடுவர்).

அணுபக்ஷம் : சம்புபக்ஷம்

சம்புபக்ஷம் அனுபக்ஷம் என்று இருவகையினர் பேசப் படுகின்றனர் (வரி 59)

சுத்தமாயையில், சிவம் சத்தி சதாசிவம் ஈசுரம் சுத்தவித்தை என்ற தத்துவங்கள் தோன்றும். இவற்றுக்குத் தனித்தனி புவனங்களும் புவனபதிகளும் உண்டு. பரசிவத்தால் அதிட்டிக்கப் பட்டு அங்கே இயங்கும் உருத்திரன் மால் அயன் இந்திரன் முதலியோர் சம்பு பக்கத்தர் ஆவர்.

அசுத்த மாயையில் உள்ள தத்துவங்களை இயக்குபவர் அனந்தேசர் முதலியோர். இவர்கள் இறைவன் ஆகிய சம்புவின் ஏவல் வழிநின்று ஐந்தொழில் நடத்துவர். இவர்கள் அனுபக்கத்தவர் ஆவர். இவர்கள் ஆன்மவகையினரான விஞ்ஞானகலர் பிரளயா கலர் ஆவர்.

மறக்கருணை; அறக்கருணை (வரி 96)

இறைவன் அடியார்கட்கு அருள் பாலிக்கையில் இருவேறு வகைகள் உண்டு.

ஒன்று மறக்கருணை; மெய்த்தொண்டர்களை மிக்க துன்பத் துக்கு உட்படுத்தி வருத்தி அருள் செய்வது. இம்மறக்கருணை பொன்னை நெருப்பிலிட்டுக் காய்ச்சி மாற்று உயர்த்துவது போலாகும் . இங்கு இறைவன் செயல், அறுவை சிகிச்சை செய்யுங்கால் மருத்துவன் செயலும் கருத்தும் போல்வது எ னின் ஓராற்றான் பொருந்தும். ==

பிறிதொன்று அறக்கருணை; மெய்த் தொண்டர்கட்குத் தண்ணளி செய்து இன்புறுத்தி அருள் புரிவது. ஊர்த்த வீரதாண்டவமுதற் பஞ்சகம் (வரி 68)

இறைவன் ஆடிய தாண்டவங்கள் வீரதாண்டவம் என்றும் ஊர்த்துவதாண்டவம் என்றும் கூறலாம். காளியோடாடிய தாண்டவம் ஊர்த்த தாண்டவம்,