பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

25



'ஏவலார் புகழ்எமது நாவலாரூரர்”

என்றது, சுந்தரரை (வரி 100). ஏவலார் என்பது வில் தொழில் வல்ல வேந்தரை. வேந்தராவார், இளமையில் இவரை வளர்த்த நரசிங்கமுனையரையரும், பின்னர் இவர்க்குத் தோழமை பூண்ட கழறிற்றறிவாராகிய சேரமான் பெருமாள் நாயனாரும் ஆவர். நாவல் என்பது சுந்தரருடைய ஊராகிய நாவலூர். ஆரூரர் என்பது சுந்தரரைக் குறிப்பதாகும். சுந்தரர் தேவாரம் 'திருப் பாட்டு' என்று குறிக்கப்பட்டது.

சுந்தரர்பொருட்டு இறைவன் நிகழ்த்திய அருட்செயல்களில் (1) திருவதிகையில் திருவடி தீக்ஷை செய்தமையும், (2) பரவையின் ஊடல் தீர்த்தற்பொருட்டுத் திருவாரூரில் நள்ளிரவில் ஒருகாலைக் கிருகால் தூது நடந்தமையும், (3) திருக்கச்சூரில் சுந்தரர் பசிபோக்க இறைவன் சோறு இரந்து கொணர்ந்து கொடுத்தமையும் ஆகிய மூன்று முறையே, ---

'எடுமேல் எனத்தொண்டர் முடிமேல்

மறுத்திடவும்

இடைவரிந் தேறும்பதம்' (வரி 103),


'எழில் பரவை இசைய ஆரூர் மறுகின் அருள்கொண் டிராமுழுதும் உலவும்பதம்’ (வரி 104) ,


"இன்தொண்டர் பசியறக் கச்சூரின் மனைதொறும்

இரக்கநடை கொள்ளும்பதம்’ (வரி 105)

என்று பாடப் பெற்றுள்ளன.

மாணிக்கவாசகர்,"ஏதவூர் தங்காத வாதவூர் எங்கோன்' என்று குறிக்கப்பட்டார் (வரி 101). வாதவூர் என்பது திருவாதவூர்; மணிவாசகர் பிறந்த ஊர். திருக்கோயில் இ ல் லா த வூ ர் திருவிலூர்' என்பர் திருநாவுக்கரசர். ஆகவே ஏதவூர் என்பது குற்றம் பொருந்தியவூர், திருக்கோயில் இல்லாதவூர் ஆயிற்று வாதவூரர் அருளிய திருவாசகம் 'இன்சொல்மணி’ எனப் பாராட்டுரை பெற்றது.


10. ஒலிநயம் பொருந்திய வரிகள்


வஞ்சமறு நெஞ்சினிடை எஞ்சலற விஞ்சுதிறன்

மஞ்சுற விளங்கும் பதம் (வரி 93):

வந்தனைசெய் புந்தியவர் தந்துயர் தவிர்ந்திட

மந்தண நவிற்றும் பதம் (வரி 94) முதலியனவாம்,