பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பிற்சேர்க்கை

பரசிவத்தின் பொது இலக்கணம்

வரி 1 முதல் 34 வரை பரசிவத்தின் நிர்க்குண நிலை - பொதுத் தன்மை 127 வடசொற்றொடர்களால் கூறப்பட்டுள்ளது. அச் சொற்றொடர்களும் பொருளும் பின்வருவன :


1.பரசிவம்-மேலான சிவம்.

2.சின்மயம்-ஞானமே உருவன து.

3.பூரணம்-நிறைந்தது; முழுமையானது.

4.சிவபோக பாக்கியம் - சிவபோகம் ஆகிய பாக்கியத்தைத் தருபவன். . .

5.பரமநிதியம்-மேலான செல்வம்.

6.பரசுகம் -மேலான சுகம்.

7.தன்மயம்- பிறிதொன்றின் கலப்பு இன்றித் தன்வயத்த னாதல் .

8.சச்சிதானந்தம்-மெய்ம்மை (சத்), அறிவு (சித்), ஆனந்தம் (இன்பம்) அமைந்தது.

9.மெய்ப் பரம ஏகாந்த நிலையம்-மேலான தனி நிலை: தத்துவம் அனைத்தையும் கடந்து அப்பாலாய்த்தான் ஒன்றேயாய் இருக்கும் நிலை.

10.பரம ஞானம்-மேலான ஞானப் பொருள்.

11.பரமசத்துவம்-மேலான என்றும் உள்ளதாம் தன்மையுடைய பொருள்.

12.மகத்துவம்-பெரியதாம் தன்மையுடையது.

13.பரம கைவல்ய நிமலம்-மேலான, தனித்திருக்கும் துய பொருள்.

14.பரமதத்துவம்-மேலான உண்மைப் பொருள்.

15.நிரதிசய நிட்களம் -ஒப்பு உயர்வு அற்ற உருவம் இல்லாத பொருள்.

16.பூத பெளதிக ஆதார நிபுணம்’-நிலமுதலிய ஐம் பூதங் களுக்கும், அவற்றால் ஆகிய பெளதிகங்களுக்கும் ஆதாரமும் நுண்மையும் உடையது. ‐--------------------------------- 1. சிவபோகமாவது, "தனக்கென ஒரு செயலின்றித் தான் அதுவாய நிற்ப, நாதனாகிய சிவன் பேதமற நின்று தானாக்கிக்கொள்வது.

2.நிபுணம்-நுண்மை (acute, minute)