பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

.


28

36. நித்ய சாம் ப்ராச்சியம்-என்றும் நிலை பெற்றதாய் எல்லாச் சமயங்கட்கும் பொதுவாய் உள்ளது.

37. பரபதம்-எல்லாப் பதங்கட்கும் முடிவிடமானது.

38. பரம சூசுமம்-மிக மிக நுட்பமானது.

39. பராபரம் மேலானதும் கீழ் ஆனதுமாயது.

40. அநாமயம் நோயில்லது (ஆமயம்-நோய்).

41. நிராதரம்-தனக்கென ஓர் ஆதாரம் இல்லாதது (எல்லா வற்றுக்கும் ஆதார மாயது).

42. அகோசரம்- அறியப்படாதது.

43. பரமதந்திரம்-மேலான தந்திரமாக விளங்குவது.

44.விசித்திரம்-வியப்பாக இருப்பது.

45. பராமுதம் - மேலான அமுதமாக இருப்பது.

46. நிராகரம்-உருவம் வடிவம் இல்லாதது: (ஆகாரம் என்பது ஆகரம் என்றாயிற்று).

47.விகாசனம்-வெளிப்படல் இல்லாதது (காசனம்-வெளிப் படல்).

48.விகோடனம்-இத்தன்மையதென்று சொல்ல முடியாதது.(கோடனம்-கோஷன ம்-ஒலித்தல்-சொல்லுதல்).

49.பரசுகோதயம்-மேலான இன்பநிலை மேன்மேலும் வளர்வது;

(சுக+உதயம் = சுகோதயம்).

50. அக்ஷயம்-அழியாதது.

51. பரிபவ விமோசனம்-இழி நிலையினின்று விடுவிப்பது.

52. குணரகிதம்-முக்குணத் தொடர்பில்லாதது.

53. விசுவம்-எல்லாமாய் உள்ளது.

54. பதித்துவம்-பதியாய் இருப்பது.

55.பரோபரீனம் -பெரியதினும் பெரியது (பர+உபரிணம்);(உபரிணம்-பெரியது).

56. பஞ்ச கிருத்திய சுத்த கர்த்தத்துவம்-படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில் களைச் செய்வதற்குரிய உண்மையான தன்மை யுடைமை. (பஞ்ச கிருத்தியம்-ஐந்து தொழில்; சுத்தம்- genuine.)

57. தற்பரம்-மேன்மைக்கு எல்லை ஆயது.

58. சிதம்பர விலாசம்-அறிவாகாயமாக விளங்குவது.