பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

29

59. பகர் சுபாவம்- (எல்லாப் பொருளினும் நிறைந்திருப்பினும் தன்னையொன்றும் கலத்தலின்றி) இயற்கையாய் உள்ள பொருள்.

60. புனிதம் -தூயது.

61. அதுலம்-ஒப்பு இல்லாதது; (துலம்-ஒப்பு).

62. அதுலிதம்-பிறிதொன்றுடன் ஒப்பு நோக்க ஒண்ணாதது.

63. அம்பராம்பரம்-(அம்பர+ அம்பரம்) ஆகாயங்கட்கெல்லாம் ஆகாயமாவது .

64. நிராலம்பனம் - எல்லாவற்றுக்கும் நிலைக்களம் அல்லது பற்றுக்கோடாய்த் தனக்கு யாதொன்றும் இல்லாதது.

65. பரவு சாக்ஷாத்காரம்-நேரில் கண்களால் கண்டு பரவத் தகுவது: (சகளத் திருமேனியுடையது).

66. நகர் அவயவம்-இன்னவுரு இன்ன நிறம் என்றறியலாகாது ஞானமாகிய திருமேனியுடையது; (இது அகளத் திருமேனி).

67. கற்பனாதீதம்-கற்பனைக்கு அப்பாற்பட்டது.

68. நிருவிகாரம்-(படைத்தல் முதலிய தொழில்களைச் செய்தும்) மாறுபாடில்லாதது.

69. பரதுரிய அநுபவம் - மூலாதாரத்தினின்று துவாத சாந்தம் வரை சென்ற ஆன்ம (இப்பரதுரியத்தில்) அனுபவிக்கும் சிவானுபவம்.

70. குரு துரியபதம் - குருவாகிய (துரிய) பதத்தில் காணப்படும் சிவபதம்.

71. அம்பகம் பகாதீத விமலம்-காண்பவன், காட்சி, காணப்படும் பொருள் என்று பகுக்கப்படும் நிலைமைக்கு அப்பாலாய் , மாசு இல்லாதது. (அம்பகம்-கண்).

72. பரம கருணாம்பரம்-மேலான கருணைக்கடல்.

73. தற்பதம்-தத் துவம் அதி என்ற மகா வாக்கியத்தில் தத் என்னும் பதத்தால் (அது என்ற சொல்லால்) குறிக்கப் படுவது.

74. கனசொல்பதாதீதம்-கனத்த மகாவாக்கியத்தில் கூறப்படும் சொற்பதம் கடந்தது.

75. இன்ப வடிவம்-இன்பமே வடிவானது.

76. பரோக்ஷ ஞானாதீதம்-சிந்தித்து அறியும் ஞானம், பரோக்ஷ ஞானம்: சிந்தையால் எண்ணி முடிவு காண முடியாத நிலை, பரோக்ஷ ஞானாதீதம்.

(பரோக்ஷம்-கண்ணுக்கு அப்பாற்பட்டது).